tamilnadu

img

கொரோனா தடுப்பு நிவாரண நிதி.... ரூ.50 லட்சம் வழங்கிய மோகன்லால்

திருவனந்தபுரம் 
நாட்டில் கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய அரசு 21 நாள் ஊரடங்கு விதித்துள்ள நிலையில், வரும் 14-ஆம் தேதி ஊரடங்கு நிறைவு பெறுகிறது. 

இந்நிலையில்,  கொரோனா வைரஸ் தடுப்பு பணிகளுக்கு மத்திய,மாநில அரசுகள் நிவாரண நிதி வருகின்றன. சாதாரண மனிதன் முதல் சினிமா, விளையாட்டு நட்சத்திரங்கள், கார்ப்பரேட் நிறுவனங்கள் என அனைவரும் கொரோனா நிவாரண நிதி அளித்து வரும் நிலையில், கேரள திரையுலக சூப்பர் ஸ்டார்   மோகன்லால் கேரள முதலமைச்சரின் கொரோனா தடுப்பு நிவாரண நிதிக்கு ரூ.50 லட்சம் நிதி வழங்கி இருக்கிறார்.

நாட்டின் பிரபல நடிகரான  அக்‌ஷய்குமார்,சிரஞ்சீவி, பிரபாஸ், பவன்கல்யாண், ராம்ரசரண் ஆகியோர் பிரதமர் நிவாரண நிதி வழங்கியுள்ள நிலையில், தென்னிந்தியாவில் உள்ள சில நடிகர்கள், நடிகைகள் சினிமா தொழிலாளர்களுக்கு (பெப்சி)  நிவாரண நிதி அளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.