விஜயவாடா:
தென்னிந்தியா மாநிலமான ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி சார்பில் ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சி செய்து வருகிறார்.
இந்த மாநிலத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடத்துவதற்கான பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்கான ஆலோசனைக் கூட்டத்தில் மார்ச் 5-ஆம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தல் நடத்த வேண்டும் எனவும், உள்ளாட்சி அமைப்புகளில் சில மாற்றங்களைச் செய்யவும் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளதாக அம்மாநில தகவல் தொடர்புத்துறை அமைச்சர் நானி தெரிவித்துள்ளார். குறிப்பாக உள்ளாட்சித் தேர்தலின் போது ஓட்டுக்குப் பணம் கொடுத்தால் அவர்களுக்கு மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்படும். தேர்தலுக்குப் பின்னர் தெரிய வந்தால் அவர்களது வேலை மற்றும் இதர சலுகைகள் பறிக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தற்போதைய நிலவரப்படி ஓட்டுக்குப் பணம் கொடுத்தால் 3 முதல் 6 மாதங்கள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.