மும்பை
பாலிவுட் பழம்பெரும் நடிகரான அமிதாப் பச்சன் மற்றும் அவரது மகன் அபிஷேக் பச்சன் ஆகிய இருவருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு மும்பை நானாவதி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தந்தை, மகன் இருவருக்கும் அடுத்தடுத்து கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால் அமிதாப்பச்சனின் மனைவி ஜெயா பச்சன், மருமகள் ஐஸ்வர்யா ராய், பேத்தி ஆரத்யா (ஐஸ்வர்யா மகள்) ஆகியோருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
இந்நிலையில் அபிஷேக் பச்சனின் மனைவியும், நடிகையுமான ஐஸ்வர்யா ராய்க்கும், அவரது மகள் ஆரத்யாவுக்கும் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. இருப்பினும் அமிதாப்பச்சனின் மனைவி ஜெயா பச்சன் மனைவிக்கு கொரோனா பரிசோதனை முடிவு பற்றி எவ்வித தகவலும் இல்லை.