விஜய் நடித்து வரும் 'தளபதி 63' படத்தை இயக்கி வரும் அட்லி மீது துணை நடிகை கிருஷ்ணாதேவி என்பவர் புகார் கொடுத்துள்ளார்.
அந்த நடிகை கொடுத்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது:
ஈவிபி ஃபிலிம் சிட்டியில் நடைபெற்று வரும் அட்லீயின் திரைப்படத்தில் வேலை பார்க்க வந்தேன். நான் வேலை பார்த்துக் கொண்டிருக்கும் போது அட்லீயும் அவரது உதவியாளர்களும் என்னை தகாத வார்த்தைகள் பேசி வேலை பார்க்க விடாமல் வெளியே அனுப்பி விட்டார்கள். எனவே அட்லீ மற்றும் அவரது உதவியாளர்களை விசாரித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்” என்று கூறப்பட்டுள்ளது.