tamilnadu

img

பி.டி.உஷாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாகவுள்ளது

கடந்த சில ஆண்டுகளாக விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகளின் வாழ்க்கை வரலாறு திரைப்படங்கள் அதிகளவில் திரைப்படமாக்கப்படுகிறது. இந்நிலையில் தற்போது தடகள போட்டியில் பல்வேறு சாதனைகள் செய்த பி.டி.உஷாவின் வாழ்க்கை வரலாறும் திரைப்படமாகவுள்ளது.

பிரபல மலையாள இயக்குனர் ரேவதி வர்மாவின் இயக்கத்தில் உருவாகவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

சமீபத்தில் இயக்குனர் ரேவதி, காத்ரினா கைஃபை சந்தித்து இந்த படம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாகவும், இந்த படத்தில் நடிக்க காத்ரினா கைஃப் ஒப்புக்கொண்டுள்ளதாகவும் இந்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது.