சென்னை:
தமிழகத்தில் திரையரங்குகளை திறக்கவும், படப்பிடிப்பு நடத்த அனுமதி கோரியும் திரைத்துறை யினர் திங்களன்று அமைச்சர் கடம்பூர் ராஜுவை சந்தித்து ஆலோசனை நடத்தினர். கொரோனா நோய் பரவல் தடுப்பு ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் திரையரங்குகள், ஷாப்பிங் மால்கள், பள்ளிக் கல்லூரிகள், உள்ளிட்டவை மூடப்பட்டுள்ளன. சமீபத்தில் அமைச்சருடன் நடத்திய பேச்சுவார்த்தையில் முடித்துக்கொடுக்க வேண்டிய தயாரிப்பு வேலைகளை தனிமனித இடைவெளியுடன் நடத்திட அரசு அனுமதி அளித்தது.ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதால், செய்தி -விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜுவை திங்களன்று பெப்சி அமைப்பின் தலைவர் ஆர்.கே.செல்வமணி, திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தின் செயலாளர் பன்னீர் செல்வம் உள்ளிட்ட நிர்வாகிகள் சந்தித்து ஆலோசனை நடத்தினர்.
திரைத்துறையில் உள்ள 25 ஆயிரம் தொழிலாளர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், சின்னத்திரை படப்பிடிப்புகள் நடத்த அனுமதிக்க வேண்டும். திரையரங்குகளை திறக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றகோரிக்கையை முன்வைத்தனர்.இதுகுறித்து முதல்வருடன் கலந்து ஆலோசித்து தெரிவிப்ப தாக அமைச்சர் கூறியதாக ஆர்.கே.செல்வமணி தெரிவித்தார்.