tamilnadu

img

நடுக்கடலில் படகு கவிழ்ந்து விபத்து : 8 மீனவர்கள் மாயம்

நடுக்கடலில் ஏற்பட்ட திடீர் சூறைக்காற்றின் காரணமாக படகு கவிழ்ந்து, ராமேசுவரத்தை சேர்ந்த 8 மீனவர்கள் மாயமாகி உள்ளனர்.

ராமேசுவரம் அருகே நடராஜபுரத்தை சேர்ந்த மீனவர்கள் 10 பேர், இன்று காலை மீன்பிடி படகு வாங்குவதற்காக கடலூருக்கு சென்றுள்ளனர். படகை வாங்கியதையடுத்து, சொந்த ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தபோது, நடுக்கடலில் ஏற்பட்ட திடீர் சூறைக்காற்றின் காரணமாக, மல்லிப்பட்டினத்தில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில் மீனவர்கள் 10 பேரும் தண்ணீரில் மூழ்கினர். ஆனால், அதிர்ஷ்டவசமாக செந்தில், காளீஸ்வரன் ஆகிய இருவர் மிதவைகள் மற்றும் கையிற்றின் உதவியுடன் உயிர் தப்பி மல்லிப்பட்டினம் மீன்படி துறைமுகத்துக்கு வந்து, இது குறித்து மீன்வளத்துறை அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, மாயமான 8 மீனவர்களை தேடும் பணிகள் நடைபெற்று வருகின்றது.