சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில், வரும் ஜூன் 19-ஆம் தேதி முதல் ஜூன் 30-ஆம் தேதி வரை ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கோவிட்-19 தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், இன்று மருத்துவ நிபுணர்கள் மற்றும் பொது சுகாதார வல்லுநர்கள் குழுவுடன் தமிழக முதல்வர் இன்று ஆலோசனை மேற்கொண்டார். இதை அடுத்து, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில், வரும் ஜூன் 19-ஆம் தேதி இரவு 12 மணி முதல் முதல் ஜூன் 30-ஆம் தேதி இரவு 12 மணி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
ஊரடங்கு காலத்தில், மளிகை கடைகள், காய்கறி கடைகள், பெட்ரோல் பங்குகள் காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை மட்டுமே செயல்படும். காய்கறி மற்றும் அத்தியாவசிய பொருட்களை ஏத்தி செல்லும் வாகனங்களுக்கு தடை இல்லை. வங்கிகள் 30 சதவீத பணியாளர்களுடன் இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளது. தேநீர் கடைகள் இயங்க அனுமதி இல்லை. உணவகங்களில் பார்சல் வழங்க மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளது. மருத்துவமனைகள், மருத்துவ பரிசோதனை மையங்கள், ஆம்புலன்ஸ் சேவைகள் வழக்கம் போல் இயங்கும். ஞாயிற்றுக்கிழமைகளில் எந்த தளர்வும் இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.