வாலிபர் சங்க திருச்சி மாவட்டச் செயலாளர் பொய்ப் புகாரில் கைதுக்கு கண்டனம்
சென்னை,பிப்.27- முதல்வர் வருகையை காரணம் காட்டி பொய்ப் புகாரில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் திருச்சி மாநகர் மாவட்டச் செயலா ளர் லெனினை காவல்துறையினர் கைது செய்துள்ளதற்கு அச்சங் கத்தின் மாநிலக்குழு கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வாலிபர் சங்கத்தின் மாநிலத் தலைவர் என். ரெஜீஸ்குமார், மாநிலச் செயலாளர் எஸ்.பாலா ஆகியோர் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறி யிருப்பதாவது:
தமிழகத்தினுடைய முதல்வ ரும், துணை முதல்வரும் தஞ்சை யில் நடைபெறக்கூடிய நிகழ்வில் பங்கேற்பதற்காக பிப்ரவரி 26 அன்று திருச்சியிலிருந்து திரு வெறும்பூர் வழியாக தஞ்சை நோக்கி காரில் பயணப்பட்டுள்ளனர். அன்றைய தினம் காலை 7 மணி அளவில் திருச்சி, திருவெறும்பூர் காவல் நிலைய ஆய்வாளர்,வாலி பர் சங்க திருச்சி மாநகர மாவட்டச் செயலாளர் லெனினை கைப்பேசி யில் அழைத்து, உங்களிடம் சில விப ரங்கள் கேட்டறிய வேண்டும். உடனடியாக காவல் நிலையத்திற்கு வந்து செல்லுமாறு கேட்டுள்ளார். அதன் அடிப்படையில் காவல் நிலையத்திற்குச் சென்ற லெனினி டம், “நீங்கள் முதல்வருக்கும், துணை முதல்வருக்கும் கருப்புக் கொடி காட்டிப் போராட்டம் நடத்தப் போவதாக உளவுத்துறை மூலம் எங்களுக்கு தகவல் வந்துள்ளது. அதனடிப்படையில் உங்களை காவல்நிலையத்தில் வைத்தி ருக்கச் சொல்லி திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரி டமிருந்து உத்தரவு வந்துள்ளது” என கூறி காவல் நிலையத்தில் உட்கார வைத்துள்ளனர்.
நாங்கள் அதுபோல எந்த இயக்கத்திற்கும் திட்டமிடவில்லை. அப்படி இருக்கும் சூழலில் எதற்காக காவல் நிலையத்தில் நீங்கள் அமர சொல்லுகிறீர்கள் என முறையிட்டுள்ளனர். எங்களுக்கு ரகசிய தகவல் வந்துள்ளது. ஆகை யால், உங்களை காவல்நிலை யத்தில் வைத்திருக்க எங்களுக்கு உத்தரவு வந்துள்ளது என்று மீண்டும் தெரிவித்து ஒரு காவலரை நியமித்து எங்கும் செல்லாமல் லெனினை பார்த்துக் கொள்ள ஆய்வாளர் ஆணையிட்டுள்ளார். பிறகு எங்களின் அமைப்பைச் சேர்ந்த தோழர்கள் இத்தகைய அரா ஜகத்தைக் கண்டித்து போராட்டம் நடத்துவோம் என எச்சரிக்கை செய்த பிறகு, ஒரு மணி நேரத்திற்கு மேல் காவல் ஆய்வாளர் எந்த வித போராட்டமும் நடத்த மாட்டோம் என்று கடிதம் எழுதி கையெழுத்து போட வைத்து பிறகு விடுவித்துள் ளார். மேலும் இரண்டு பேர் பெயரைச் சொல்லி அவர்கள் யார் உங்களுடைய அமைப்பில் தான் உள்ளனரா என விசாரணை செய்துள்ளனர். அதுபோல நபர்கள் எங்களுடைய அமைப்பில் இல்லை என்று கூறியும் மேலும் மேலும் தொடர்ந்து விசாரித்துக் கொண்டே இருந்துள்ளனர்.
முதல்வர் வருகையை பயன்படுத்தி எங்கள் அமைப்பின் திருச்சி மாவட்டச் செயலாளர் பா. லெனினை விசாரணை என்ற பெயரில் கைது செய்து காவல் நிலையத்தில் வைத்துள்ள செயலை இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் தமிழ்நாடு மாநி லக்குழு வன்மையாகக் கண்டிக்கி றது. இத்தகைய ஜனநாயக உரிமை களை பறிக்கும் செயலை ஆட்சி யாளர்கள் கைவிட வேண்டும். மேலும் பொய்யான குற்றச் சாட்டைக் கூறி கைது செய்த காவல் ஆய்வாளர், மாவட்டக் கண்கா ணிப்பாளர் ஆகியோர் மீது துறை ரீதியான நடவடிக்கையை தமிழக அரசு எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது. முதல்வர் வருகையை பயன்படுத்தி எங்கள் அமைப்பின் திருச்சி மாவட்டச் செயலாளர் பா. லெனினை விசாரணை என்ற பெயரில் கைது செய்து காவல் நிலையத்தில் வைத்துள்ள செயலை இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் தமிழ்நாடு மாநி லக்குழு வன்மையாகக் கண்டிக்கி றது. இத்தகைய ஜனநாயக உரிமை களை பறிக்கும் செயலை ஆட்சி யாளர்கள் கைவிட வேண்டும். மேலும் பொய்யான குற்றச் சாட்டைக் கூறி கைது செய்த காவல் ஆய்வாளர், மாவட்டக் கண்கா ணிப்பாளர் ஆகியோர் மீது துறை ரீதியான நடவடிக்கையை தமிழக அரசு எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.