சென்னை,அக்.22- விக்கிரவாண்டி மற்றும் நாங்கு நேரி இடைத்தேர்தலில் பயன்ப டுத்தப்பட்ட மின்னணு வாக்கு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைக்கு சீல் வைக்கப்பட்டது. தமிழகத்தில் காலியாக உள்ள விக்கிரவாண்டி மற்றும் நாங்கு நேரி சட்டமன்றத் தொகுதி களுக்கு இடைத்தேர்தல் நடை பெற்றது. விக்கிரவாண்டி தொகுதி வாக்கு எந்திரங்கள் விழுப்புரம்-சென்னை தேசிய நெடுஞ்சாலை அருகே உள்ள ஈ.எஸ்.பொறியி யல் கல்லூரிக்கு கொண்டு வரப்பட்டது.
இந்தநிலையில் ஸ்டாங் ரூம் எனப்படும் பாதுகாப்பு அறையில் வாக்கு எந்திரங்கள் வைக்கப் பட்டு மாவட்ட தேர்தல் அலுவல ரும், ஆட்சியருமான சுப்பிரமணி யன், தேர்தல் மேற்பார்வை யாளர், வேட்பாளர்கள், வாக்குச் சாவடி முகவர்கள் உள்ளிட்டோர் முன்னிலையில் சீல் வைக்கப்பட் டது. வாக்கு எந்திரங்கள் வைக் கப்பட்டுள்ள பொறியியல் கல்லூ ரிக்கு 3 அடுக்கு போலீஸ் பாது காப்பு போடப்பட்டுள்ளது. அதேபோல் நாங்குநேரி இடைத்தேர்தலில் 299 வாக்குச் சாவடிகளில் பயன்படுத்தப்பட்ட வாக்கு எந்திரங்கள், பாளை யங்கோட்டையில் உள்ள அரசு பொறியியல் கல்லூரிக்கு கொண்டுவரப்பட்டு பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டது. அந்த அறைக்கு தேர்தல் பார்வையாளர் விஜயசுமிதா, தேர்தல் நடத்தும் அலுவலர் நடே சன், வேட்பாளர்கள் முன்னி லையில் சீல் வைக்கப்பட்டு 3 அடுக்கு பாதுகாப்பு போடப் பட்டுள்ளது. இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை அக்.24 அன்று நடைபெறுகிறது.