tamilnadu

img

தூத்துக்குடி துப்பாக்கி சூடு: நினைவஞ்சலி கூட்டத்தில் 500 பேர் கலந்து கொள்ள நீதிமன்றம் அனுமதி


தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் நினைவஞ்சலி கூட்டத்தில் 500 பேர் மட்டுமே கலந்து கொள்ள உயர் நிதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

தூத்துக்குடியில் செயல்பட்டுவந்த ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி அமைதியான வழியில் போராடிய பொதுமக்கள் போராட்டத்தின் 100வது 2018 மே 22ம் தேதியன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட திட்டமிட்டு பேரணியாக சென்றனர். இதைத்தொடர்ந்து அமைதியாக சென்ற பொதுமக்களை காவல் துறையினர் தடுத்து நிறுத்தினர். அப்போது நடந்த கலவரத்தின்போது காவல் துறையினர் துப்பாக்கி சூடு நடத்தினர். காவல்துறையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 14 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயம் அடைந்தனர். இந்நிலையில் வரும் 22 ம் தேதி நினைவஞ்சலி கூட்டம் நடத்த அனுமதி கோரி காவல்துறையிடம் மனு அளிக்கப்பட்டது. ஆனால் கூட்டம் நடத்த காவல் துறையினர் அனுமதி வழங்கவில்லை. இதையடுத்த நினைவஞ்சலி கூட்டம் நடத்த அனுமதியளிக்ககோரி பாத்திமாபாபு மனுதாக்கல் செய்திருந்தார்.இந்த மனு ஏற்கனவே விசாரணைக்கு வந்த போது கூட்டத்தில் பேசுபவர்கள், கலந்துகொள்பவர்களின் எண்ணிக்கை குறித்து மனுதாரர் தரப்பு வழக்கறிஞரிடம் தெரிவிக்கவேண்டும் என கூறியிருந்தனர். இந்த மனு ஜி.ஆர்.சுவாமிநாதன், எம்.தண்டபாணி ஆகியோர் கொண்ட அமர்வில் கடந்த வியாழனன்று விசாரணைக்கு வந்தது. 

வழக்கை விசாரித்த நீதிபதிகள் தூத்துக்குடி பெல் ஹோட்டல் உள் அரங்கில் நினைவஞ்சலி கூட்டம் நடத்த அனுமதியளித்தனர்.மேலும் மே 22ம் தேதி காலை 9 மணி முதல் 11 மணி வரை மட்டுமே நடத்தவேண்டும், காவல்துறையினரின் நிபந்தனைகளை பின்பற்ற வேண்டும் என்றனர். இந்த மனு உயர்நீதிமன்ற மதுரைக்கிளையின் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நினைவஞ்சலி கூட்டத்தில் கலந்து கொள்வோரின் எண்ணிக்கை500 ஆக உயர்த்தி நீதிமன்றம் அனுமதி வழங்கியது. ஏற்கனவே 250பேர் கலந்து கொள்ளலாம் என நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில் தற்போது 500 பேர் கலந்து கொள்ளலாம் என்று உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.