சென்னை, ஏப். 30- தமிழகத்தில் குடும்ப அட்டைகள் இல்லாத நபர்களை கணக்கெடுத்து அவர்களுக்கும் உதவி வழங்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், அமைப்பு சாரா தொழிலாளர்களான கட்டுமானத் தொழி லாளர்கள், தினக்கூலிகள், வெளி மாநிலங்களில் இருந்து புலம் பெயர்ந்து வந்து பணியாற்றும் தொழி லாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு தமிழகத்தில் குடும்ப அட்டை கள் இருக்காது என்பதால், அவர்களின் ஆதார் அட்டை, ஓட்டுனர் உரிமம் உள்ளிட்ட அடையாள அட்டை களின் அடிப்படையில், உணவு தானியங்களை வினி யோகிக்க தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி அருளரசு என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாராய ணன் மற்றும் நிர்மல்குமார் அமர்வு முன்பு விசார ணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் தமிழ கத்தில் குடும்ப அட்டை இல்லாத நபர்களை அரசு உடனடியாக கணக்கெடுத்து அவர்களுக்கும் உதவி வழங்கியது தொடர்பாக நீதிமன்றத்தில் வரும் மே 20ஆம் தேதிக்குள் அறிக்கை அளிக்கும் படி தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளனர்.