districts

கூடுதல் கட்டணம் வசூல்: பயணிக்கு இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவு

தேனி, பிப்.10:  தேனி மாவட்டம், பெரிய குளத்தைச் சேர்ந்தவர் பிரேம்சுதாகர். இவர், கடந்த 2022 ஆகஸ்ட்  மாதம் சோழ வந்தான் அரசுப் போக்கு வரத்துக் கழகத்திற்குச் சொந்தமான அரசுப் பேருந் தில் மதுரையிலிருந்து பெரிய குளத்திற்குச் சென்றார். அவ ரிடம் பேருந்து நடத்துநர் ரூ.65 கட்டணம் வசூலித்துள்ளார்.  அரசு சார்பில் ரூ.50 கட்டணம் நிர்ணயிக்கப் பட்டுள்ள நிலையில், கூடுத லாக கட்டணம் வசூலிப்பது குறித்து பிரேம்சுதாகர் நடத்துநரிடம் கேட்டுள்ளார். அது இடைநில்லா விரைவு பேருந்து என்பதால் ரூ.65 கட்ட ணம் வசூலிக்கப்பட்டதாக நடத்துநர் கூறியுள்ளார்.  ஆனால்,  சாதாரணப் பேருந்தை போலவே மதுரை யிலிருந்து பெரியகுளத் திற்குச் செல்ல 2 மணி நேரம்  ஆகியுள்ளது.  இதனால் தனக்கு மன உளைச்சல் ஏற் பட்டதாக  தேனி மாவடட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் பிரேம்சுதாகர் மனு தாக்கல் செய்தார்.  இந்த மனுவின் மீது விசா ரணை நடத்திய நுகர்வோர் நீதிமன்ற நீதிபதி ஆர்.சுந்தர்,  சோழவந்தான் கிளை அரசு போக்குவரத்துக் கழக நிர்வாகம், பிரேம்சுதாகருக்கு  கூடுதலாக வசூலிக்கப்பட்ட கட்டணத் தொகை ரூ.15, சேவை குறைபாட்டிற்கு ரூ.10 ஆயிரம், மன உளைச்ச லுக்கு ரூ.5 ஆயிரம் இழப்பீ டாகவும், வழக்கு செல வுக்குரூ. 10 ஆயிரமும் வழங்க வேண்டும் என்று உத்தர விட்டார்.