districts

மயில்சிலை காணாமல் போன வழக்கை 6 வாரத்தில் முடிக்க நீதிமன்றம் உத்தரவு

சென்னை, ஜன. 31 - மயிலாப்பூர் கபாலீஸ் வரர் கோயில் மயில் சிலை  காணாமல் போனது தொடர்பான விசாரணையை 6 வார காலத்திற்குள் முடிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது 2004ஆம் ஆண்டு  குடமுழுக்கு நடைபெற்ற போது புன்னைவனநாதர் சன்னதியில் இருந்த மயில் சிலை காணாமல் போனது. இது குறித்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு 2018ம் ஆண்டு  வழக்கு பதிவு செய்தது. இந்த  வழக்கை விரைந்து முடிக்கக்  கோரி ரங்கராஜன் நரசிம்மன் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு பொறுப்பு  தலைமை நீதிபதி முனிஷ் வர்நாத் பண்டாரி மற்றும் நீதி பதி ஆதிகேசவலு அமர் வில் திங்களன்று (ஜன.31) விசாரணைக்கு வந்தது. இதில், அரசு தலைமை வழக்கறிஞர் ஆஜராகி, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு விசாரணை நடத்தி வந்ததால், அறநிலை யத்துறை அதிகாரிகளிடம் உண்மை கண்டறியும் குழுவின் விசாரணையை நிறுத்தி வைத்திருந்ததாக தெரிவித்தார். அப்போது, சிலையை மீட்க வேண்டும் அல்லது அதேபோன்ற சிலையை நிறுவ ஆகம விதி  அனுமதிப்பதாக மனுதாரர் தெரிவித்தார். இதனையடுத்து, காணா மல் போன மயில் சிலையை  போல ஒரு சிலையை அங்கு  வைப்பது தொடர்பாக தொல்லியல் துறையுடன் ஆலோசித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடர்பாக இரண்டு வாரங்க ளுக்குள் அறிக்கை தாக்கல்  செய்ய வேண்டும் என  இந்து சமய அறநிலையத் துறைக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். சிலை மாயமானது குறித்த விசார ணையை 6 வார காலத் திற்குள் முடிக்க சிலை கடத்தல் தடுப்பு பிரிவு மற்றும் உண்மை கண்டறி யும் குழுவிற்கு உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை 2 வாரத்திற்கு ஒத்தி வைத்த னர்.