சென்னை,டிச.31- பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரை கொலை செய்யத் தூண்டும் வகை யில் பேசியதாகக் கூறி இலக்கியப் பேச்சாளர் தமிழ்க் கடல் நெல்லை கண்ணன் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அவரை கைது செய்ய காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். திருநெல்வேலியைச் சேர்ந்த இலக்கியப் பேச்சாளரும் மூத்த அரசி யல்வாதியுமான நெல்லைக் கண் ணன், எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் மேலப்பாளையத்தில் நடைபெற்ற குடியுரிமை பாதுகாப்பு மாநாட்டில் கடந்த 29 ஆம் தேதி பங்கேற்றார். அதில் பிரதமர் மோடியையும் உள்துறை அமைச்சர் அமித்ஷா வையும் ஒருமையில் பேசியதாக பா.ஜ.க மற்றும் இந்து அமைப்புகள் சார்பில் காவல் நிலையங்களில் புகார்கள் அளிக்கப்பட்டன.
இதனையடுத்து நெல்லை கண்ணன் மீது இரண்டு சமூகங்க ளுக்கிடையே மோதல் உருவாக்கி அதன் மூலம் கலவரத்தை உரு வாக்க முயல்வது, இரண்டு மதங்க ளுக்கிடையே தேவையற்ற , ஆதார மற்ற தகவல்களைப் பரப்பி மத மோதலை உருவாக்குவது உட்பட 2 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய் யப்பட்டது. அவரை கைது செய்யக் கோரி பாஜகவினர் நெல்லை கண்ணன் வீட்டு முன்பு போராட்டத் தில் ஈடுபட முயன்றனர். இதனை யடுத்து அவரது வீட்டுக்கு காவல் துறை பாதுகாப்பு போடப்பட்டுள் ளது. மேலும் அவரை கைது செய்யும் நடவடிக்கையையும் காவல்துறை யினர் மேற்கொண்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே நெல்லைக் கண்ணன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தமிழக பாஜக பொதுச்செய லாளர் கே.எஸ்.நரேந்திரன் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தைச் சந்தித்துப் புகாரளித்தார். பிரதமரையும் உள்துறை அமைச் சரையும் அவதூறாகவும் வன்முறை யைத் தூண்டும் வகையிலும் பேசிய நெல்லை கண்ணன் மீது உரிய நட வடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஏற்கனவே காவல்துறை இயக்கு நரிடமும் தமிழக பாஜக சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது குறிப் பிடத்தக்கது.