நீதிபதிகள் நியமனத்தில் சீனியாரிட்டியை பின்பற்ற வேண்டும் என்று நீதிபதி பானுமதி கொலிஜியம் அமைப்புக்கு கடிதம் எழுதி உள்ளார்.
இமாச்சல்பிரதேச உயர்நீதிமன்ற நீதிபதி ராம சுப்பிரமணியன் உள்ளிட்ட 4 உயர்நீதிமன்ற நீதிபதிகளை உச்சநீதிமன்றத்திற்கு இடமாற்றம் செய்ய கொலீஜியம் பரிந்துரைத்துள்ளது. இந்நிலையில் கொலீஜியத்தில் உறுப்பினராக இல்லாத உச்சநீதிமன்ற நீதிபதி பானுமதி, கொலீஜியத்திற்கு கடிதம் ஒன்றை எழுதி உள்ளார். அந்த கடிதத்தில் நீதிபதிகள் இடமாற்றத்தில் சீனியாரிட்டியை கருத்தில் கொள்ள வேண்டும். ராமசுப்ரமணியனை விட மணிப்பூர் உயர் நீதிமன்ற நீதிபதி ராமலிங்கம் சுதாகர் சீனியர் என்ற நிலையில் அவரை உச்சநீதிமன்றத்திற்கு இடமாற்றம் செய்திருக்க வேண்டும் என பானுமதி குறிப்பிட்டுள்ளார்.
இதில் நீதிபதி பானுமதி, ராம சுப்ரமணியன், ராமலிங்கம் சுதாகர் ஆகிய மூன்று நீதிபதிகளுமே சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளாக பணியாற்றியவர்கள். மேலும் இவர்கள் மூவரும் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.