tamilnadu

img

குண்டர்களால் கொல்லப்பட்ட தொழிலாளி வழக்கில் 4 பேர் மீது குற்ற அறிக்கை தாக்கல்...

புதுதில்லி:
வட கிழக்கு தில்லியில் பிப்ரவரியில் நடைபெற்ற கலவரத்தின்போது குண்டர் கும்பலால் கொல்லப்பட்டவர் வழக்கில் நான்கு பேர் மீது தில்லி காவல்துறையினரின் சிறப்புப் புலனாய்வுக்குழு குற்ற அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

 தொடர்பாகக் காவல்துறையினர் கூறுகையில், சுலேமான் என்கிற கட்டுமானத் தொழிலாளி கொல்லப்பட்டது தொடர்பாக இரு இளம் சிறார் உட்பட நான்கு பேர் மீது கர்கர்டூமா நீதிமன்றத்தில்குற்ற அறிக்கை தாக்கல் செய்யப்பட்டிருப்பதாகவும் பிப்ரவரி 26 அன்று காலை 8 மணியளவில், தில்லி காரவால் நகரில், டிபி மருத்துவமனை அருகில் சிலர் கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டிருந்தபோது, அவர்களை 30 அல்லது 40 பேர் கொண்ட குண்டர் கும்பல்ஒன்று தாக்கியிருக்கிறது. குண்டர் கும்பல் தங்கள் கைகளில் கம்புகள், கம்பிகள் முதலானவற்றை ஏந்தி இருந்தார்கள். இக்குண்டர் கும்பல், ஸ்ரீராம் சவுக் அருகே வேலை செய்து கொண்டிருந்தவர்களில் சனோபர், சுனில் குமார், சுலேமான், மாமூர் ஆகிய நால்வரைப் பிடித்து, தாக்குதல் தொடுத்திருக்கின்றனர். இவர்களில் மாமூர் எப்படியோ தப்பி ஓடிவிட்டார்.

குண்டர் கும்பல், பின்னர் ஒவ்வொருவரின் மத அடையாளத்தைத் தெரிந்துகொள்வதற்காக விசாரணை செய்திருக்கிறது. அவர்கள் சுனிலை விசாரிக்கும்போது அவர் இந்து என்று தெரிந்ததால், அந்த இடத்தைவிட்டு சென்றுவிடு என்று கூறியிருக்கின்றனர். சுனில், தன்னுடன் சனோபரையும், சுலேமானையும் அனுப்புங்கள் என்று கேட்டிருக்கிறார். உடனே குண்டர் கும்பல் சுனிலை நையப்புடைத்திருக்கிறது. பின்னர் சுனிலை விரட்டி அடித்திருக்கிறது. அதன்பின்னர் சுலேமானைத் தொடர்ந்து தாக்கி இருக்கிறது.அதேசமயத்தில் நினைவுதிரும்பிய சனோபர், நிலைமைகளைப் புரிந்துகொண்டு சம்பவயிடத்திலிருந்து தப்பிச் சென்றுவிட்டார். குண்டர் கும்பல் சுலேமானை பிரேம் விகார் பாலம் வரை,கம்புகளாலும், கம்பிகளாலும் அடித்துக் கொண்டே இழுத்துச் சென்றிருக்கிறது. பின்னர் சுலேமானை கழிப்பிடம் அருகே தூக்கி எறிந்துவிட்டுச் சென்றுவிட்டது.

பின்னர் அங்கிருந்து சுலேமான் போலீஸ் கட்டுப்பாட்டு அறை வேனில் ஜிடிபி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். சிகிச்சையின்போது சுலேமான் இறந்துவிட்டார்.புலனாய்வில்,  குற்ற அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள குற்றஞ்சாட்டப் பட்டிருப்பவர்கள் கண்ணால் கண்ட சாட்சிகளின் வாக்குமூலங்களிலிருந்தும், தொழில்நுட்ப சாட்சியங்களிலிருந்தும் அடையாளம் காணப்பட்டு, கைது செய்யப்பட்டார்கள். இவர்கள் நால்வரும் குண்டர் கும்பலின் ஒரு பகுதியாக இருந்திருக்கிறார்கள்.  இந்த நால்வரும் பாதிக்கப்பட்டவர்களைத் தாக்கியதில் பிரதான பங்கு வகித்தார் என்று கண்ணால் கண்ட சாட்சிகளின் வாக்குமூலங்களிலிருந்து நன்கு தெரிய வந்தது.இவ்வாறு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.குற்றஞ்சாட்டப்பட்ட நால்வரில் இருவர் இளஞ்சிறார்களாவர். (ந.நி.)