புதுதில்லி:
தில்லியில் சிஏஏ எதிர்ப்புப் போராட்டத்திற்கு எதிராக பாஜகவே திட்டமிட்டு கலவரங்களை நிகழ்த்தியதாக, ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை எம்.பி.யான சஞ்சய் சிங்குற்றம் சாட்டியுள்ளார்.
கடந்த பிப்ரவரியில் தில்லியில் நடைபெற்ற சிஏஏ எதிர்ப்புப் போராட்டங்கள் அதன் தொடர்ச்சியான கலவரங்கள்குறித்து ஆம் ஆத்மி வாயைத் திறக்காமல் இருக்கிறது என்றுவிமர்சனங்கள் இருந்துவந்த நிலையில், தற்போது சஞ்சய் சிங்எம்.பி. இந்த விவகாரம் குறித்துப் பேசியுள்ளார்.“பாஜகவின் ஆழமான சதியின் விளைவுதான் தில்லி கலவரங்கள். கலவரங்களை உருவாக்கிக் கொண்டு சென்றது பாஜகதான். நான் இதனை முதல் நாளிலிருந்தே கூறி வருகிறேன். இன்று மீண்டும் வலியுறுத்துகிறேன். நாடாளுமன்றத்திலும் இதைத் தெரிவித்தேன், பாஜக-தான் கலவரத்தை ஏற்பாடு செய்தது என்று. மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் வரும் தில்லி போலீஸ் எந்த ஒரு நடவடிக்கையும்எடுக்காமல் வேடிக்கைப் பார்த்தனர்” என்று செய்தியாளர்களிடம் சஞ்சய் சிங் தெரிவித்துள்ளார்.
மேலும், கலவரத்தை அடக்காமல் வேடிக்கைப் பார்த்ததில்லி போலீஸ் பரிந்துரைக்கும் 6 அரசு வழக்கறிஞர்களே கலவரம் தொடர்பான வழக்குகளில் ஆஜராவார்கள் என்று ஆளுநர் பைஜல் கூறுவதாகவும், இவ்விவகாரத்தில் ஆளும் ஆம் ஆத்மி கட்சிக்கும், துணை நிலை ஆளுநருக்கும் மோதல் போக்கு நிலவுகிறது என்றும் கூறியிருக்கும் சஞ்சய் சிங்,“தில்லி கலவரத்தின் இருண்ட செயல்களையும் இருண்ட முகங்களையும் அடைக்காக்கவே தில்லி ஆளுநர் முயற்சிக்கி
றார்” என்று குற்றம் சாட்டியுள்ளார்.