சிவகங்கை,மார்ச்.26- பெண் பயிற்சி மருத்துவரைத் தாக்கிய இளைஞர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 24ஆம் தேதி இரவு சிவகங்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பெண் பயிற்சி மருத்துவரைத் தாக்கிய சந்தோஷ்(20) என்ற இளைஞர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பெண் பயிற்சி மருத்துவர் தாக்கப்பட்டதைக் கண்டித்து பயிற்சி மருத்துவர்கள் நேற்று பணி புறக்கணிப்பில் ஈடுபட்டனர். இந்நிலையில் இளைஞரை கைது செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.