சிவகங்கை, மார்ச் 21- சிவகங்கை மாவட்டம் இளையான் குடி தாலுகா நெஞ்சத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட கண்டனி கிராம மக்கள் பொதுமயானத்திற்கு பாதை கேட்டு ஆட்சியரிடம் மனு கொடுத்தனர். நெஞ்சத்தூர் ஊராட்சி கண்டனி கிராமத்தில் பொது மயானம் உள்ளது. இந்த மயானத்திற்கு பாதை இல்லாததால் வயல்- வரப்புகளே பாதையாக பயன் படுத்தப்பட்டு வருகின்றன. கடந்த மார்ச் 12 ஆம் தேதி இந்த ஊரைச் சேர்ந்த சாரதா என்பவர் மரணமடைந்தார். இதையடுத்து அவரது உடலை வயல்களுக்குள் எடுத்துச்செல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது. இந்த நிலையில் மயானத்திற்கு பாதை வசதி கேட்டு நெஞ் சத்தூர் ஊராட்சிதலைவர் ராஜேந்திரன், சேவுகள் தலைமையில் கிராம மக்கள் ஆட்சியரிடம் மனு அளித்தனர். ஆட்சியர்நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார்.