தஞ்சாவூர், ஜூலை 24- தஞ்சை கோட்டாட்சியர் அலுவல கத்தில் புதன்கிழமை நடைபெற்ற விவ சாயிகள் மனு நாள் கூட்டத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பூதலூர் தெற்கு ஒன்றியச் செயலாளர் சி. பாஸ்கர், தமிழர் தேசிய முன்னனி இயக்க பொதுச் செயலாளர் அய்யனா வரம் முருகேசன் ஆகிய முன்னிலை யில், காங்கேயம்பட்டி கிராமத்தினர் கோட்டாட்சியர் சுரேஷிடம் அளித்த மனுவின் விபரம்: தஞ்சாவூர் மாவட்டம் பூதலுார் அருகே காங்கேயம்பட்டி பகுதியில் உள்ள வெண்ணாறு படுகையை ஒட்டி அப்பகுதியை சேர்ந்த பீட்டரின் மனைவி அடைக்கலமேரி என்பவருக்கு சொந்த மான 1 ஏக்கர் வயலில் இருந்து 15 அடி ஆழத்திற்கு ஜே.சி.பி.மூலம் மணல் அள்ளப்படுகிறது. இதனால் விவசாயமும், நிலத்தடி நீரும் பாதிக்கும் என பூதலுார் வட்டாட்சி யர் சிவக்குமாரிடம் கிராம மக்கள் சார்பில் மனு அளித்தோம். மேலும் கடந்த 20-ம் தேதி ஊர் மக்கள் ஒன்று திரண்டு ஒரு லாரியை மடக்கி பிடித்து பூதலுார் காவல் துறையில் ஒப்ப டைத்துள்ளோம். ஆனால் சம்பவ இடத்தை இதுநாள் வரை வட்டாட்சியர் சென்று பார்வையிடவில்லை. ஆகவே, மணல் திருடுபவர்கள் மீது வழக்கு பதிந்து தண்டனை பெற்று தர வேண் டும். இது தொடர்பாக விரைவில் நட வடிக்கை எடுக்க வேண்டும் என குறிப் பிட்டிருந்தனர். இதுகுறித்து முருகேசன் கூறுகை யில், கடந்த 20-ம் தேதி இரவு 5 லாரி களை பிடித்து காவல்துறையில் ஒப்ப டைத்தோம். ஆனால் 4 லாரிகளை காவல்துறையினர் விட்டு விட்டு, ஒரு லாரி மீது மட்டுமே வழக்கு பதிவு செய் துள்ளனர். மேலும் அப்பகுதியில் 15 அடி ஆழத்திற்கு மணல் அள்ளுவ தால் நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக பாதிக்கப்படும். மேலும் விவசாய நிலங்கள் வீணாகி விடும் நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர் என்றார்.