கீழடியில் 11ஆம் கட்ட அகழாய்வு நடத்த ஒன்றிய அரசு அனுமதி வழங்கியது.
சிவகங்கை மாவட்டம் கீழடியில் இதுவரை நடைபெற்ற 10 கட்ட அகழாய்வுகளில், சிறிய செங்கல் கட்டுமானம், கண்ணாடி பாசி மணிகள், மீன் உருவம் பொறிக்கப்பட்ட பானை ஓடுகள், யானை தந்தத்தால் ஆன பகடைக்காய்கள், உலோகப் பொருள்கள், வட்டச் சில்லுகள் என சுமார் 20,000-க்கும் மேற்பட்ட தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், கீழடியில் நடத்தப்பட்ட 10ஆம் கட்ட அகழாய்வு குறித்த அறிக்கையை ஒன்றிய அரசிடம் தமிழ்நாடு தொல்லியல் துறை சமர்ப்பித்துள்ளது. இதை தொடர்ந்து, 11ஆம் கட்ட அகழாய்வு நடத்த ஒன்றிய அரசு அனுமதி வழங்கியது. ஜனவரியில் திறந்தவெளி அருங்காட்சியகம் திறக்கப்பட்ட பிறகு பணிகள் தொடங்கப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
