சிவகங்கை, ஜூலை 5- சிவகங்கை மாவட்டம் திருப்பாச் சேத்தியில் ரூ.68 லட்சம் செலவில்கட்டப் பட்ட புதிய ஆரம்ப சுகாதார நிலையத்தை சென்னையில் இருந்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் சனிக் கிழமை திறந்து வைத்தார். திருப்பாச்சேத்தி யில் சட்டமன்ற உறுப்பினர் நாகராஜன்குத்து விளக்கேற்றினார். சுகாதார இணை இயக்கு நர் யசோதாமணி உட்பட பலர் கலந்து கொண்டனர். திருப்பாச்சேத்தியில் ஆரம்ப சுகாதார நிலையம் தொடங்கவேண்டுமென கடந்த பத்தாண்டுகளாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போராடி வந்த நிலையில் தற்போது திறக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் திருப் பாச்சேத்தியை சுற்றியுள்ள இருபதுக்கும் மேற்பட்ட கிராமமக்கள் பலன் பெறுவர். மக்களின் கோரிக்கையை நிறைவேற்றிய சுகாதாரத்துறைக்கு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் திருபுவனம் ஒன்றியச் செய லாளர் அய்யம்பாண்டி நன்றி தெரிவித்துள் ளார்.