tamilnadu

10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வை தள்ளிவைக்க ஆசிரியர்கள் கோரிக்கை

சிவகங்கை, மே 18- தமிழ்நாட்டில் ஜூன் 1 முதல் நடை பெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ள பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வை மாணவர்களின் பொருளாதார, உள வியல் காரணங்களை கருத்தில் கொண்டு தள்ளிவைக்க வேண்டும் என தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரி யர் கூட்டணி தமிழக அரசைக் வலி யுறுத்திக் கேட்டுக்கொண்டுள்ளது. இது குறித்து அச்சங்கத்தின் சிவ கங்கை மாவட்டச் செயலாளர் முத்துப் பாண்டியன் அனுப்பியுள்ள அரசிற்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்ப தாவது:- கொரோனா நோய்த்தொற்றால் கடந்த 53 நாட்களாக நடைமுறையில் உள்ள ஊரடங்கால் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாகப் பாதிக்கப்பட் டுள்ளது.

2019-20- ஆம் கல்வியாண்டில் கடந்த ஏப்ரல் 1 ம் தேதி தொடங்கி நடை பெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வை நடத்த இயலாத நிலை ஏற்பட்டது. இந்த நிலையில் தமிழக அரசு பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வை வரும் ஜூன் 1-ஆம் தேதில் முதல் நடத்தப் போவதாக அறிவித்துள்ளது.  இது மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள், கல்வியாளர்கள் மத்தி யில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள் ளது. தமிழகத்தில் ஊரடங்கு தொட ரும் நிலையில், பொதுப்போக்குவரத்து தொடங்காத நிலையில், பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வை நடத்துவது என்பது முற்றிலும் பொருத்தமற்றதா கும்.  பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வு எழுதும் சுமார் 12 லட்சம் மாணவர்களில் 80 சதவீதத்திற்கு மேற்பட்டோர் ஊர டங்கால் வாழ்வாதாரம் இழந்து தவிக் கும் பெற்றோர்களின் குழந்தைகள்.

வறுமையின் கோரப்பிடியில் சிக்கித் தவிக்கும் அந்தக் குழந்தைகள் தற் போது பொதுத்தேர்வை எதிர்கொள் ளும் மனநிலையில் இல்லாத நிலை யில் அவர்கள் மீது திடீரென பொதுத் தேர்வைத் திணிப்பது ஏற்புடைய தல்ல. தமிழகத்தில் ஊரடங்கு முற்றி லுமாக விலக்கிக் கொள்ளப்பட்டு, பொதுப் போக்குவரத்து தொடங்கிய பின்பு, கொரோனா நோய்த்தொற்றின் தாக்கம் குறைந்த பின்பு, மாண வர்கள் தங்கள் பள்ளிகளுக்குச் சென்று தங்கள் ஆசிரியர்களின் கட்டுப்பாட் டில் குறைந்தது 15 நாட்களாவது மீள் பயிற்சி பெற்ற பின்பே பொதுத் தேர்வை நடத்த வேண்டும்.