திருவள்ளூர், ஆக.13- 100 நாள் வேலை திட்டத்தில் தொடர்ந்து வேலை வழங்க வேண்டும் என வலியுறுத்தி அருமந்தை கூட்டுச்சாலையில் அகில இந்திய விவசாய தொழி லாளர் சங்கத்தின் சார்பில் சாலை மறியல் போராட்டம் செவ்வாயன்று (ஆக. 13) நடைபெற்றது. திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அருகில் உள்ள வழுதிகம்பேடு, பெருங்கா வூர், சீமாவரம், கொடி ப்பள்ளம், அருமந்தை, ஞாயிறு, விச்சூர் ஆகிய ஊராட்சிகளில் கடந்த இரண்டு மாதமாக 100 நாள் வேலை வழங்கப்பட வில்லை எனக் கூறப்படு கிறது. வேலை வேண்டி விண்ண ப்பித்த அனைவருக்கும் வேலை வழங்க வேண்டும். ஆனால் சட்ட விரோதமாக சுழற்சி முறை என்று சொல்லி ஒரு சிலருக்கு மட்டும் வேலை வழங்குவதாக பாதிக்கப்பட்டவர்கள் கூறு கின்றனர். மேலும், வேலை செய்த 15 நாட்களுக்குள் ஊதியம் வழங்க வேண்டும், அடை யாள அட்டையையும் வழங்க வேண்டும். ஆனால், அதிகாரிகள் இதை எதையும் கடைபிடிப்பதில்லை. இதனால் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பாதிப்படை ந்துள்ளனர். இந்நிலையில் அகில இந்திய விவசாயத் தொழி லாளர் சங்கத்துடன் இணைந்து பொதுமக்கள் அருமந்தை கூட்டுச்சாலை யில் செவ்வாயன்று (ஆக.13) மறியலில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது பற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வட்டார வளர்ச்சி அலுவலர் ரவி தலைவர்க ளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் தொடர்ந்து வேலை வழங்கப்படும், வேலை முடிக்கப்பட்ட மறு வாரத்தில் ஊதியம் வழங்கப்படும், அடையாள அட்டை வழங்கப்படும் என எழுத்துப் பூர்வமாக உறுதியளித்தார். இதனைத் தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது. இந்தப் போராட்டத்தில் அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் அ.து.கோதண்டன், ஒன்றியத் தலைவர் இ.ரவி, ஒன்றியச் செயலாளர் டி.சரளா, ஒன்றிய துணை நிர்வாகிகள் பி.வி.முனுசாமி, செந்தில்குமார், சிபிஎம் ஒன்றியச் செயலாளர் ஜி.வி. எல்லையன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.