திருப்பூர், ஆக. 25 – பஞ்சாயத்து ராஜ் சட்டத்துக்கு விரோதமாக திருப்பூர் மாவட்ட நிர் வாகம் செயல்படுவதற்கு திருப்பூர் மாவட்ட ஊராட்சித் தலைவர்கள் கூட் டமைப்பு கடும் எதிர்ப்புத் தெரிவித்துள் ளது. திருப்பூர் மாவட்ட ஊராட்சிமன்றத் தலைவர்கள் கூட்டமைப்பைச் சேர்ந் தோர் திங்களன்று இதுகுறித்து மாவட் ட ஆட்சியர் அலுவலகத்தில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:
மத்திய அரசு நேரடியாக ஊராட்சிகளுக்கு வழங்கும் நிதி 14 ஆவது நிதிக்குழு மானியம் ஆகும். ஊராட்சியில் உள்ள மக்களின் அடிப்படைத் தேவைகளை அறிந்து ஊராட்சி மன்றத்தில் தீர்மா னங்கள் நிறைவேற்றி அந்த தேவை களை நிறைவேற்றவே நிதிக்குழு மாநில நிதி ஊராட்சிகளுக்கு ஒதுக்கப் படுகிறது. ஆனால், திருப்பூர் மாவட்ட நிர்வாகம் பஞ்சாயத்து ராஜ் சட்டத் துக்கு மாறாகவும், மத்திய அரசின் வழிகாட்டுதலுக்குப் புறம்பாகவும் ஊராட்சிகளின் ஒப்புதல் இல்லாமல் அந்த ஊராட்சி நிதிகளில் மாவட்ட ஆட் சியர் அலுவலகத்தில் திட்ட இயக்கு நர் பேக்கேஜ் டெண்டர் என வைக்கப் பட்டுள்ளது.
தனியாக சாலைகளை மட்டும் தேர்வு செய்து இப்படி பேக் கேஜ் டெண்டர் விடுவதை ரத்து செய்து, அந்த நிதியை ஊராட்சி களுக்கு வழங்க வேண்டும். மேலும் ஜேஜேஎம் திட்டத்தின் மூலம் வீடுகளுக்கு நேரடியாக குடிநீர் வழங்கும் திட்டமும் ஊராட்சிகள் மூலம் டென்டர் வைத்து நிறைவேற்ற மத்திய அரசு நிதி வழங்கியுள்ளது. இந்த திட்டத்தைப் பற்றி 1992 பஞ் சாயத்து ராஜ் சட்டம் 72 – 73 சட்டத் திருத்தம் 243 ஜி 110 விதி தெளிவு படுத்துகிறது. எந்த வகையிலும் ஊராட்சிமன்றத் தலைவருக்குத் தெரியப்படுத்தாமல் மாவட்ட ஆட்சி யர் அலுவலகத்தில் பேக்கேஜ் முறையில் டெண்டர் விட நோட்டீஸ் போடப்பட்டுள்ளது.
இது போன்ற நடவடிக்கை சட்டப்படி ஊராட்சி களுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகா ரத்தை மீறும் செயலாகும். ஆகவே ஜேஜேஎம் திட்டத்தில் வைக்கப்பட் டுள்ள டெண்டரை ரத்து செய்து ஊராட் சிகளுக்கு உரிய நிதியை வழங்க வேண்டும். அதேபோல், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் நிறைவேற்றும் பணிகள் 10 சதவிகிதம் வேலையாட்கள் மற்றும் மெட்டிரியல் பங்களிப்புடன் செயல் படுத்தவும் இந்த சட்டத்தில் வழிகாட்டு நெறிமுறைகள் உள்ளன. ஆனால் அதற்குப் புறம்பாக வெண்டர் என்ற பெயரில் ஒப்பந்ததாரர்களை வைத்து அதிகாரிகள் மட்டும் சட்டத்துக்குப் புறம்பாக செயல்படுத்தப்பட்டு வரு கிறது.
எனவே, இதை உடனடியாக மாற்றி மகாத்மா காந்தி வேலை உறு தித் திட்டத்தை ஊராட்சிகள் நேர டியாக செயல்படுத்த உத்தரவிட வேண்டும். இந்த கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றாவிட்டால் ஊராட்சித் தலைவர்களுக்கு உள்ள சட்டப்படி உரிமைகளை மீட்டெடுக்க மாவட்டக் கூட்டமைப்பின் மூலம் அனைத்து தலைவர்களும் ஒருங் கிணைந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தொடர் போராட்டம் நடத்தப்படும் என்றனர். மேலும் ஊராட்சித் தலைவர்களின் மாநிலக் கூட்டமைப்பு மூலம் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தொட ரப்பட்ட வழக்கில், ஊராட்சிகளுக்கு வழங்கப்படும் நிதியில் மாவட்ட நிர்வா கம் தலையிட்டு பேக்கேஜ் டெண்டர் வைக்கும் அதிகாரம் இல்லை.
திட்ட நிதி முழுவதும் ஊராட்சிகளே கையாள வேண்டும். அதற்கு ஊராட்சிகளுக்கு அதிகாரம் உள்ளது என தீர்ப்பு வழங் கப்பட்டுள்ளது என்றும் மாவட்ட ஊராட்சிமன்றத் தலைவர்கள் கூட்ட மைப்பின் சார்பில் அளிக்கப்பட்ட மனு வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.