tamilnadu

வரியின்றி வேளாண் விளைபொருட்கள் இறக்குமதி இந்திய சந்தையை அந்நியர் கபளீகரம் செய்யும் ஒப்பந்தத்தில் கையெழுத்திடாதே!

சிவகங்கை,அக்.17- 44 நாடுகளிலிருந்து வரியின்றி வேளாண் விளைபொருட்களை இறக்குமதி செய்து, இந்திய சந்தையை அந்நிய நாடுகள் கபளீகரம் செய்யும்  ஒப்பந்தத்தில்  மோடி அரசு கையெழு த்திடக் கூடாது என்று வலியுறுத்தி  தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் நவம்பர் 4 அன்று போராட்டம் நடைபெறுகிறது. தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநி லக்குழு கூட்டம் சிவகங்கையில் மாநிலத் தலைவர் வி.சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்றது. அகில இந்திய பொதுச் செயலாளர் ஹன்னன் முல்லா, மாநிலப் பொதுச் செயலாளர் பெ.சண்முகம், அகில இந்திய இணைச் செயலாளர் விஜுகிருஷ்ணன்,அகில இந்திய துணைத் தலைவர் கே.வரதராசன்,  மாநிலப் பொருளாளர் பெருமாள் ஆகியோர் பங்கேற்றனர்.  இக்கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. உள்நாட்டு விவ சாயத்தை பெருமளவு நாசப்படுத்தும்  பிராந்திய பொருளாதார புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் நவம்பர் 4 அன்று மோடி அரசு கையெழுத்திட உள்ளது. இதன் மூலம் ஆசிய பிராந்தியத் தில் உள்ள 44 நாடுகள் உற்பத்தி செய்யும் பொருட்களை வரியின்றி இறக்குமதி செய்து கொள்ள வழிவகை செய்கிறது.வேளாண் விளைபொருட்கள் வெளிநாடுகளிலிருந்து தாராளமாக இறக்குமதி செய்யப்பட்டு இந்திய சந்தையை கபளீகரம் செய்யும். இதற்கான ஒப்பந்தத்தில்  மோடி அரசு கையெழுத்து போடு வதை எதிர்த்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் நவம்பர் 4-ல் மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் . காவிரி- வைகை -குண்டாறு- வைப்பாறு இணைப்புத் திட்டமானது  சிவகங்கை, புதுக்கோட்டை, இராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி, கரூர், திருச்சி ஆகிய 7 மாவட்டங் களில் 10 லட்சம் ஏக்கர் நிலம் பாசன வசதிபெறும் திட்டமாகும். இத் திட்டத்திற்கு போதுமான நிதி ஒதுக்கி செயல்படுத்த வேண்டும். 2018-19 ஆம் ஆண்டிற்கான பயிர் காப்பீட்டை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.விவசாயம் பாதிக்கப்பட்ட சூழலில் விவசாயிகளுக்கு உரிய காலத்தில்  இழப்பீடு கிடைக்கச் செய்ய வேண்டும்.இத்தொகையை விவசாயிகள் அனுமதியில்லாமல்  வங்கி கடனுக்கு வரவு வைப்பதை தடுக்க வேண்டும்.  நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2500 வழங்க வேண்டும். குறுவை அறுவடை பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இப்பகுதியில் தேவையான இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்களை  துவங்க  வேண்டும். நேரடி கொள்முதல் நிலையங்களில் கடந்த ஆண்டு நடைபெற்ற முறைகேடு, லஞ்சத்தை களைந்திட முன்வர வேண்டும் என்று வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.