சிவகங்கை:
காளையார்கோவிலில் செவ்வா யன்று நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் நிதியளிப்பு கூட்டத்தில் தேர்தல் நிதி ரூ.14,35,155ஐ மாநில செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் ராமலிங்கத்திடம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.கே. தண்டியப்பன் வழங்கினார்.
மாவட்ட செயலாளர் கே. வீரபாண்டி தலைமையில் நடைபெற்ற இப்பொதுக் கூட்டத்தில் ஒன்றிய செயலாளர் திருநாவுக்கரசு வரவேற்றுப் பேசினார். மாநிலக்குழு உறுப்பினர் கே.சாமுவேல்ராஜ், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எஸ்.முத்துராமலிங்க பூபதி, வி.கருப்புசாமி, ஏ .ஆர் .மோகன், பி.அய்யம் பாண்டி, ஏ.ஆறுமுகம், இடைக்கமிட்டி செயலாளர்கள் கே.அழகர்சாமி, ஏ. பொன்னுச்சாமி, ஜி. உலகநாதன், வி.ஆண்டி,பி. சின்ன கண்ணன், எஸ்.காந்திமதி, மாவட்டக்குழு உறுப்பினர்கள், காளையார் கோவில் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் உள்பட திரளானோர் கலந்துகொண்ட னர்.