சென்னை, ஏப்.13- சென்னை மாநகராட்சியில் இருக்கும் தெரு வோர வியாபாரிக ளுக்கும் ரூபாய் 1000 வழங்க முதல்வர் உத்தரவிட்டிருக்கிறார். நிவாரண நிதி பெற தகுதியான வியாபாரிகள் தங்கள் வங்கிக் கணக்கு விபரங்களை உடனடியாக வழங்க வேண்டும் என சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக அவர் வெளியிடப்பட்டி ருக்கும் செய்திக்குறிப்பு:
சென்னை மாநகராட்சியில் 27 ஆயிரத்து 195 பதிவு செய்யப்பட்ட தெருவோர வியாபாரிகள் உள்ளனர். அவர்களுக்கு முதலமைச்சர் நிவாரண நிதி வழங்க உத்தரவிட்டுள்ளார். அதன்படி, இது வரை வங்கி கணக்கு விவரங்களை வழங்காத, பதிவு செய்யப்பட்ட தெருவோர வியாபாரிகள் தங்கள் வங்கியின் பெயர் மற்றும் கிளை முகவரி, சேமிப்பு கணக்கு எண், கிளை குறியீட்டு எண், ஐ.எப்.எஸ்.சி குறியீட்டு எண் மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சியால் வழங்கப் பட்ட தெரு வோர வியாபாரிகளுக்கான அடையாள அட்டை எண், வியாபாரியின் தொலைபேசி எண் ஆகிய வற்றின் நகல் எடுத்து சம்மந்தப்பட்ட மண்டல நகர விற்பனை குழு மண்டல அலுவலகங்களிலோ, 9499932899 என்ற வாட்ஸ் ஆப் எண்ணிலொ, மாநக ராட்சி இணையதள மின்னஞ்சல் மூலமாகவோ அனுப்ப வேண்டும். அவ்வாறு அனுப்பிய வியாபாரி களுக்கான நிவாரண தொகை சம்மந்தப்பட்டவர்க ளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.