ரூ. 10 ஆயிரம் நிவாரணம் வேண்டும்
கடலூர், ஏப். 6- முறையாக கணக்கெடுப்பு நடத்தி அனைத்து சாலையோர வியாபாரிக ளுக்கும் அரசின் நிவார ணத்தை உயர்த்தி வழங்க வேண்டும் என சிஐடியு வலியுறுத்தி உள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு சாலையோர வியாரி கள் சங்கத்தின் மாநில அமைப்பாளர் பி.கருப்பை யன் தமிழக முதல்வருக்கு கோரிக்கை மனு ஒன்றை அனுப்பியுள்ளார். அதன் விவரம் வருமாறு:
உலகை அச்சுறுத்திவரும் கொரானா வைரஸி லிருந்து மக்களை பாதுகாக்க தமிழக அரசு 21 நாள் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ள தையும் நோய் பர வாமல் இருக்க அரசு எடுக்கும் நடவடிக்கை,ரூ.1000 நிவாரணம் வழங்குவதை யும் வரவேற்கிறோம். நிவாரணம் வழங்குவது தொடர்பாக அரசு வெளி யிட்டுள்ள அரசாணையில் மாநகராட்சி நகராட்சி பேரூராட்சிகளில் கணக்கெடுப்பு பட்டியலில் உள்ள வர்களுக்கு மட்டுமே ரூபாய்1000 வழங்கப்படும் என உள்ளது. சாலையோர வியாபாரிகள் வாழ்வா தார பாதுகாப்பு சட்டத்தின்படி வியாபாரிகளை கணக்கெடுப்பு நடத்தியபோது அந்தந்த பகுதியில் உள்ள வியாபாரிகள் சங்கத்திற்கு தகவல் தெரி விக்காமல் ஒரு நாள் மட்டுமே கணக்கெடுப்பு நடந்தது. இதனால் சாலையோர வியாபாரிகளில் ஒரு பகுதியினர் கணக்கெடுப்பில் விடுபட்டுள்ளனர். இதனால் அரசு அறிவித்துள்ள நிவாரணம் பட்டிய லில் விடுபட்டுள்ள சாலையோர வியாபாரிகளுக்கு கிடைக்காத நிலை உள்ளது.
எனவே அந்தந்த பகுதியிலுள்ள சாலையோர வியாபாரிகள் சங்க பிரதிநிதிகளுடன் விவாதித்து கணக்கெடுப்பின்போது விடுபட்டுள்ள சாலையோர வியாபாரிகளுக்கும் தாங்கள் அறிவித்துள்ள நிவா ரணம் கிடைப்பதற்கு ஆவன செய்ய வேண்டும். மேலும், ஊரடங்கினால் வேலைக்கு செல்லாமல் வரு மானம் இல்லாமல் முடங்கி கிடக்கும் சாலையோர வியாபாரிகளுக்கு அறிவித்துள்ள நிவாரணம் ரூபாய் 1000 போதுமானதல்ல. எனவே அனைத்து சாலையோர வியாபாரிகளுக்கும் நிவாரணமாக ரூபாய் 10000 வழங்க வேண்டும்.
கட்டுமானம் மற்றும் ஆட்டோ தொழிலாளர்க ளுக்கு வழங்குவதாக அறிவித்துள்ளது போல் சாலை யோர வியாபாரிக ளுக்கும் 15 கிலோ அரிசி ஒரு கிலோ பருப்பு ஒரு கிலோ எண்ணை வழங்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.