சிங்கப்பூர் சிட்டி
கிழக்காசிய நாடான சிங்கப்பூரில் கொரோனா பரவல் உச்சத்தில் உள்ள நிலையில், அந்நாட்டு அரசு ஜூன் 1 வரை ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. குறிப்பாகக் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் அங்கு 1000-க்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதால் அந்நாட்டு மக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.
இவர்களில் 15 பேர் மட்டுமே சிங்கப்பூர் குடிமக்கள் அல்லது நிரந்தரமாக வசிக்கும் உரிமை பெற்றவர்கள். மற்றவர்கள் வெளிநாட்டவர் (அவர்களில் பெரும்பாலானவர்கள் இந்தியர்கள்) எனச் சிங்கப்பூர் சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதன்மூலம் சிங்கப்பூரில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 10,141 ஆக உயர்ந்துள்ளது. இன்று யாரும் இறக்கவில்லை (மாலை 6 மணி வரை). 800-க்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். 27 பேர் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர்.