சென்னை, அக். 4- அரசு துறைகளின் சேவைகளை மக்கள் எளிதில் பெறும் வகையில், தகவல் தொழில்நுட்ப வசதியை அதிக அளவில் புகுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவ தாக வருவாய் மற்றும் தகவல் தொழில் நுட்பத் துறை அமைச்சர் ஆர்.பி. உதய குமார் தெரிவித்தார். சென்னை எம்.ஆர்.பி. நகரில் உள்ள தனி யார் நட்சத்திர விடுதியில் அரசின் செயல் பாட்டில் தகவல் தொழில்நுட்பத்தை புகுத்தி, மக்களுக்கும் அரசுக்கும் இடையேயான இடைவெளியை குறைப்பது, மக்களின் நேரத்தை மிச்சப்படுத்துவது உள்ளிட்டவை குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கலந்து கொண்டு பேசினார். அப்போது, அரசு துறைகளின் சேவை களை மக்கள் எளிதில் பெறும் வகையில் பல்வேறு செயலிகள் புதிதாக அறி முகப்படுத்தப் பட்டு இருப்பதாகவும், இது மக்களின் நேரத்தை மிச்சப்படுத்துவ துடன், அரசு துறைகளின் பணிகளையும் எளி மையாக்குகிறது. இதுபோல் மேலும் பல திட்டங்களை தமிழக அரசு கொண்டு வர உள்ளதாகவும் அவர் கூறினார். இதுவரை 2 கோடி பேர் தங்களுக்கு தேவை யான சான்றுகளை, அரசு அலுவலகங்க ளுக்கு செல்லாமலேயே இணையதளம் மூலம் வீடுகளில் இருந்து விண்ணப்பித்து வாங்கியிருப்பதாகவும் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் குறிப்பிட்டார்.