tamilnadu

img

ஜார்கண்டில் சாலை விபத்தில் சிக்கிய 11 பேர் பலி

ஜார்கண்டில் பேருந்து விபத்துக்குள்ளானதில் சிக்கிய 11 பேர் பலியாகி உள்ளனர். மேலும் 25 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஜார்கண்ட் மாநிலம் டானு பானுவா பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் 120 கி.மீ வேகத்தில் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. திடீரென பேருந்தின் பிரேக் வேலை செய்யாததால் எதிரே வந்த லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 25 பேர் காயம் அடைந்துள்ளனர். காயம் அடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காயம் அடைந்தவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. 

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.