சேலம், ஜூலை 29 - சிவகங்கையில் வெடிகுண்டு வீசி கொலை முயற்சியில் ஈடுபட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த மூவரை சேலத்தில் தனிப் படை காவலர்கள் கைது செய்தனர்.
சிவகங்கை மாவட்டம், தாணிச் சாவூரணியில் ராஜபாண்டி என்பவர் மீது கடந்த 21 ஆம் தேதி நாட்டு வெடிகுண்டு வீசி விட்டு தப்பியோடியதாக விஜயகுமார், மதி பாலா, முத்துராமலிங்கம் ஆகிய மூன்று நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவர்களைப் பிடிக்க தனிப்படை அமைத்து காவல்துறையினர் தேடி வந்தனர்.
இந் நிலையில், தருமபுரி அருகே உள்ள தொப்பூர் பகுதியில் குற்றவாளிகள் பதுங்கி இருப் பதாக ரகசியத் தகவல் கிடைத்தது. இதை யடுத்து தனிப்படைப் போலீசார் குற்றவாளி களை சுற்றி வளைத்துப் பிடிக்க முயன்ற போது இருசக்கர வாகனத்தை அங்கேயே விட்டு விட்டு தப்பி ஓடினர்.
இதன்பின் மீனாட்சிசுந்தரம் தலைமை யிலான நான்கு பேர் கொண்ட தனிப்படை காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வந்த நிலையில், சேலத்தில் நண்பர் ஒருவர் வீட்டில் மூன்று குற்றவாளிகளும் தங்கி இருப்பதாக ரகசியத் தகவல் கிடைத் தது.
இதையடுத்து, புதனன்று அதிகாலை சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள அங்கம்மாள் காலனி பகுதியில் பதுங் கியிருந்த விஜயகுமார், மதிபாலா, முத்து ராமலிங்கம் ஆகிய 3 பேரையும் பிடிக்க முற்பட்டபோது, மூவரும் தப்ப முயன்றனர்.
அப்போது, சாக்கடையில் விழுந்ததில் இருவருக்கு முதுகெலும்பும், ஒருவருக்கு கை எழும்பும் முறிந்தது. இதனால் மூன்று பேரும் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக் காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.