tamilnadu

img

சேலம் திமுக வேட்பாளரை ஆதரித்து சிபிஎம் வாகன பிரச்சாரம்

சேலம், ஏப். 14 -சேலம் நாடாளுமன்ற தொகுதி திமுகவேட்பாளர் எஸ்.ஆர்.பார்த்திபனை ஆதரித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் இரண்டு சக்கர வாகன பிரச்சாரம் நடைபெற்றது. மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சேலம் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் எஸ்.ஆர்.பார்த்திபனை ஆதரித்து சிபிஎம் மேற்கு மாநகர குழு சார்பில் மாநகர மேற்கு செயலாளர் எம்.கனகராஜ் தலைமையில் சேலம் பால் மார்க்கெட் பகுதியில் இரண்டு சக்கர வாகன பிரச்சாரம் நடைபெற்றது. வாகன பிரச்சாரத்தை கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.வெங்கடபதி துவக்கி வைத்தார். இதில், சிபிஎம் மாவட்ட செயலாளர் பி.ராமமூர்த்தி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.குணசேகரன், மாவட்ட குழு உறுப்பினர்கள் ஐ.ஞானசௌந்தரி, பி.பாலகிருஷ்ணன் உள்ளிட்டு மாநகர மேற்கு கமிட்டி உறுப்பினர்கள் முன்னணி ஊழியர்கள் பலர் பங்கேற்றனர்.இதேபோல், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மாநகர வடக்கு குழு சார்பில் சாமிநாதபுரம் பகுதியில் இரண்டு சக்கர வாகனப்பிரச்சாரம் நடைபெற்றது. திமுக அவைத் தலைவர் எஸ்.டி.கலையமுதன் வாகன பிரச்சாரத்தை துவக்கி வைத்தார். பிரச்சாரம்அரிசிபாளையம், சத்திரம், ரத்தினசாமிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்றது. இதில் வாலிபர் சங்கம் மாநில குழு உறுப்பினர் கற்பகம், மாவட்ட பொருளாளர் வெங்கடேஷ், மாநகர செயலாளர் கதிர்வேல், மாநகர தலைவர் சதீஷ்குமார், பொருளாளர் அம்ஜத் கான் உள்ளிட்டு வடக்கு வாலிபர் சங்க முன்னணி ஊழியர்கள் பங்கேற்றனர்.