tamilnadu

img

சேலத்தில் ஆசிரியர் தினவிழா கொண்டாட்டம்

சேலம், செப்.5- சேலத்தில் ஆசிரியர் தின விழா வியாழனன்று கொண்டாட்டப்பட்டன. சேலம் மாவட்ட பள்ளிக் கல்வித்துறை சார்பில் சேலம் சாரதா கல்லூரி சாலையில் உள்ள தனி யார் பள்ளியில் ஆசிரியர்  தின விழா கொண்டாடப் பட்டது. இதில் சேலம் மாவட்டத்தை சேர்ந்த பல் வேறு ஆசிரியர்கள் கலந்து  கொண்டனர். தொடர்ந்து மாணவ, மாணவியரின் கண்கவர் கலை நிகழ்ச்சி  நடைபெற்றது.  இதையடுத்து அரசு மற்றும் அரசு நிதி யுதவி பெறும் பள்ளிகளில் 100 சதவிகித தேர்ச்சி பெற்ற பள்ளிகள் மற்றும் ஒவ் வொரு பாடத்திலும் 100 சதவிகித தேர்ச்சி வழங்கிய ஆசிரியர்களுக்கு சேலம்  மாவட்ட வருவாய் அலுவலர் பாராட்டுச் சான்றிதழ் வழங்கினார். இந்த நிகழ்ச்சி யில் சேலம் மாவட்ட முதன்மைக் கல்வி  அலுவலர் கணேசமூர்த்தி, கல்வி அலுவ லர்கள் கலந்து கொண்டனர்.
அறிவியல் இயக்கம் 
இதேபோல் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் குகை கிளை சார்பில் ஆசிரியர் தினம் கொண்டாட்டப்பட்டது. இந்  நிகழ்ச்சிக்கு பகுதி செயலாளர் ராமச் சந்திரன் தலைமை தாங்கினார்.  அறிவியல் இயக்க ஒருங்கிணைப்பாளர்  சுரேஷ் பாடல்களைப் பாடி மாணவர் களை ஆரவாரப் படுத்தினார். நிகழ்ச்சியில்  புத்தக கண்காட்சி இடம் பெற்றிருந்தது. ஆசிரியர் தினத்தில் பள்ளியின் ஆசிரி யர்கள் அனைவரும் கௌரவிக்கப் பட்டனர். மேலும் ஊட்டச்சத்து வார உறுதி மொழியையும் மாணவர்கள் ஏற்றனர். இதில் சமூகநலத்துறையை சேர்ந்தவரும் அறிவியல் இயக்க கிளை நிர்வாகியு மான பேபி கீதாஞ்சலி பள்ளிக் குழந்தை கள் மற்றும் ஆசிரியைகள் பங்கேற்றனர்.