இளம்பிள்ளை, ஜூன் 14- சேலம் மாவட்டம், இடங்கணசாலை பகு தியில் விசிக சார்பில் 100 குடும்பங்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கினர். சேலம் மேற்கு மாவட்டம், சங்ககிரி தொகுதிக்குட்பட்ட மகுடஞ்சாவடி ஒன்றி யம், இடங்கணசாலை பேரூராட்சி, காடை யாம்பட்டி பகுதியில் விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் 100 குடும்பங்களுக்கு தலா 5 கிலோ அரிசி, காய்கறிகள், மளிகை பொருட் கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட் களை வழங்கினர். இந்நிகழ்ச்சிக்கு மாவட் டச் செயலாளர் அய்யாவு தலைமை வகித் தார். இதில், மகுடஞ்சாவடி ஒன்றியச் செய லாளர் பழனிச்சாமி உள்ளிட்ட முக்கிய நிர் வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.