சேலம்:
சேலம் மாவட்டம் மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு முதலமைச்சர்மு.க.ஸ்டாலின் தண்ணீரை திறந்து வைத் தார். இதனை அடுத்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
மேட்டூர் அணை கட்டப்பட்ட நாளில் இருந்து குறுவை சாகுபடிக்கு ஜூன் மாதம் 12ஆம் தேதி 18 ஆவது முறையாக தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. 2001-2002ஆம் ஆண்டுக்குப் பிறகு தொடர்ச்சியாக 2-வது ஆண்டாக ஜூன் 12ஆம் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்டு உள்ளது. மேட்டூர் அணையில் இருந்து தற்போது தண்ணீர் திறந்து விடுவதன் மூலமாக திருச்சி, தஞ்சாவூர், கரூர், திருவாரூர், நாகை அரியலூர் பெரம்பலூர் புதுக்கோட்டை கடலூர் ஆகிய மாவட்டங்களில் சுமார் 5.21 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும். ஜூன் 12ஆம் தேதி மேட்டூர் அணையை திறந்து விடுவதில் இந்த அரசு உறுதியாக உள்ளது. குறிப்பிட்ட இந்த நாளில் மேட்டூர்அணையை திறப்பதனால் சரியான காலத்தில்தண்ணீர் கிடைக்கிறது. பாசன பரப்பும் உற் பத்தியும் அதிகரிக்கிறது. இதனால் உழவர் பெருமக்கள் மகிழ்ச்சி அடைகின்றனர்.
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கு முன்னதாக மார்ச் 7-ஆம் தேதி அன்று திருச்சியில்நடைபெற்ற கூட்டத்தில் ஏழு உறுதிமொழிகள் அளிக்கப்பட்டது. திராவிட முன்னேற்ற கழக ஆட்சி அமையும்போது ஏழு முக்கியஉறுதிமொழிகளை நிறைவேற்றும் அரசாகஅமையும் என்று. அதில் மிக முக்கியமானதாக மேலாண்மையும் நீர்வளமும் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் குடிமக்கள் அனைவருக்கும் குறையாத தண்ணீர் என்பதும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த இலக்குகளை 10 ஆண்டு காலத்தில் அடைவோம் என்றும் உறுதி அளித்து இருந்தேன்.இதற்கான திட்டமிடுதல் தற்போது தொடங் கப்பட்டுள்ளது. அனைவருக்கும் உயர்தரக் கல்வி மற்றும் உயர்தர மருத்துவம், எழில்மிகுமாநகர் உடைய மாநிலம், உயர்தர ஊரக கட்டமைப்பு, உயர்தர வாழ்க்கைத்தரம், அனைவருக்கும் அனைத்துமான தமிழகம் இந்த இலக்குகளை நாம் அடைய வேண் டும். தமிழகத்தின் நிகர பயிரிடும் பரப்பளவு60 விழுக்காடாக உள்ளது. இதை எழுபத் தைந்து விழுக்காடாக 10 ஆண்டுக்குள் அடைய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சென்ற ஆண்டில் வழக்கமான அளவைவிட காவிரிப்படுகையில் குறுவை சாகுபடி பரப்பு அதிகமாகி வருகிறது. இதைஒவ்வொரு ஆண்டும் அதிகப்படுத்தி வரவேண்டும் என்பதுதான் தமிழக அரசின் குறிக்கோள். இன்று திறந்து விடப்பட்ட தண்ணீர் கடைமடை பகுதி வரை சென்று சேர வேண்டும். இதை கண்காணிக்க அரசு உயர் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
காவிரி டெல்டா மாவட்டங்களில் தூர்வாரும் பணிகள் நடைபெறும் இடங்களுக்கு நான்நேரடியாக சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டேன். இப் பணிகளை போர்க் கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டுமென்று ஆணையிடப்பட்டுள்ளது. திருச்சிமாவட்டத்தில் 63 பணிகள், கரூர் மாவட்டத்தில் 10 பணிகள், அரியலூர் மாவட்டத்தில் 33 பணிகள், தஞ்சை மாவட்டத்தில் 185 பணிகள், திருவாரூர் மாவட்டத்தில் 174 பணிகள், நாகை மாவட்டத்தில் 89 பணிகள், மயிலாடுதுறை மாவட்டத்தில் 26 பணிகள், கடலூர் மாவட்டத்திற்கு 58 பணிகள், புதுக் கோட்டை மாவட்டத்திற்கு 9 பணிகள் என்றுதிட்டமிடப்பட்டு இப்பணிகள் நடைபெற்று வருகிறது. மொத்தம் ஒன்பது மாவட்டங்களில் 647 பணிகள் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ரூபாய் 65.10 கோடி மதிப்பீட்டில் இப்பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் மூலம் 4 ஆயிரத்து 63 கிலோ மீட்டர் தூரம் தூர்வாரப்படாமல் உள்ளது. இப்பணிகள் அப்பகுதி உழவர் அமைப்புகளை கலந்தாலோசித்து பணிகளை மேற்கொண்டுள்ளோம். இப் பணிகளை குறித்தகாலத்தில் முடிக்க வேண்டும் என்பதற்காகஒன்பது மாவட்டங்களுக்கும் சிறப்பு கண்காணிப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதைப் பார்வையிட விவசாய அமைப்புகள் மற்றும் உழவர் குழுக்கள் நியமிக்கப்பட் டுள்ளது. இந்து தூர்வாரும் பணிகள் காரணமாக டெல்டா மாவட்டங்களில் நீர் வளம்மேம்படும். விவசாயிகளுக்கு உதவும் வகையில் விதைகள் உரங்கள் பூச்சிக்கொல்லி மருந்துகள் போன்ற இடுபொருட்கள் போதுமான அளவு இருப்பு உள்ளது. குறுவை சாகுபடிக்கான பணிகளை துவங்கிட விவசாயிகளுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்கிட வேளாண் துறை மற்றும் கூட்டுறவு துறை உள்ளிட்ட அனைத்து துறைகளும்ஈடுபட்டுள்ளன. இந்த ஆண்டு நிர்ணயிக்கப்பட்ட சாகுபடியை தாண்டி உணவு உற்பத்தியில் தமிழகம் சாதனை படைக்கும். தற்போதுமுதற்கட்ட பணிகள் தொடங்கப்பட்டுள்ளது அடுத்த கட்ட பணிகள் திட்டமிட்டபடி நடைபெறும்.
தமிழகத்துக்கு உரிய தண்ணீரை காவிரியில் திறந்துவிட வேண்டும் என்று மத்தியநீர்வளத் துறை அமைச்சருக்கு தமிழக அரசு கடிதம் எழுதியுள்ளது. சென்ற ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட குடிமராமத்து தூர்வாரும் பணிகள் குறித்து பலமுறை சட்டமன்றத் தில் அமைச்சர் துரைமுருகன் வெள்ளை அறிக்கை வைக்கும்படி கூறினார். அதற்கு அப்போதைய ஆட்சியினர் எந்த பதிலும் தெரிவிக்கவில்லை. தற்போது அது குறித்து விபரங்கள் சேகரிக்கப்படும். கொரோனாவை பொறுத்தவரை மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டுஊரடங்கில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட் டுள்ளது. பொதுமக்கள் அவசியமின்றி தேவையில்லாமல் வெளியில் நடமாடுவதை தவிர்க்கவேண்டும். தவறாமல் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும். அரசு கூறும் வழிமுறைகளை தவறாமல் கடைப்பிடித்து ஒத்துழைப்பு வழங்க வேண்டும். பொதுமக்கள் ஒத்துழைப்பு இருந்தால் கொரோனாவை முழுமையாக கட்டுப்படுத்த இயலும். மேற்கு மண்டலத்தில் தளர்வுகள் இல்லாமல் ஊரடங்கு தொடர்கிறது. குறைந்த பகுதிகளில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது அந்ததளங்களில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படஅனுமதிக்கப்பட்டுள்ளது என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். நிகழ்ச்சியில் அமைச்சர்கள்துரைமுருகன், நேரு, செந்தில் பாலாஜி, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சேப்பாக் கம் சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின், நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர் கள், அரசு உயர் அதிகாரிகள் உள்ளிட்ட பலர்பங்கேற்றனர்.