tamilnadu

img

அபராதம் வசூலித்த பஜாஜ் பைனான்ஸ் நிறுவனம் முற்றுகை

சேலம், ஜூன் 4- சேலத்தில் செயல்பட்டு வருகிற பஜாஜ் பைனான்ஸ் நிறு வனம், ரிசர்வ் வங்கி வழிகாட்டுதல்களை மீறி அபராதம் வசூ லித்ததால் வாடிக்கையாளர்கள் அலுவலகத்தை முற்றுகை யிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். சேலம் மாவட்டம், 5 ரோடு பகுதியில் பஜாஜ் பைனான்ஸ் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனம் கொரோனா ஊரடங்கையொட்டி ரிசர்வ் வங்கி வெளியிட் டுள்ள அறிவுறுத்தல்களை கடைபிடிக்காமல் மாதத் தவணை செலுத்தாத வாடிக்கையாளர்களிடமிருந்து அபராதம் வசூ லித்து வந்துள்ளது. மேலும், மாதத் தவணை பிடிப்பதற் காக வாடிக்கையாளர்கள் முன்கூட்டியே வழங்கியிருக்கும் காசோலையை பஜாஜ் பைனான்ஸ் நிர்வாகம் வங்கியில் செலுத்தி பணம் எடுக்க முயற்சிப்பதாகவும், காசோலையில் பணம் இல்லாத பட்சத்தில் அதற்கு தனியாக வங்கியில் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

இதனால் அதிர்ச்சியடைந்த வாடிக்கையாளர்கள் பஜாஜ் பைனான்ஸ் நிறுவனத்தை முற் றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.  இது குறித்து தகவலறிந்து வந்த சூரமங்கலம் காவல் துறையினர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டவர்களு டன் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தினர். இத னைத் தொடர்ந்து மாதத்தவணை செலுத்துவதில் உள்ள குள றுபடிகள் குறித்து பொதுமக்களுக்கு தெளிவுபடுத்தும்படி பஜாஜ் பைனான்ஸ் நிர்வாகத்திடம் காவல் துறையினர் அறி வுறுத்தினர். அதேநேரம், ரிசர்வ் வங்கி விதிகளை மீறி செயல் படும் பஜாஜ் பைனான்ஸ் நிறுவனம் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத் துள்ளனர்.