tamilnadu

img

சேலம் மாநகராட்சி 16 ஆவது வார்டில் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி சிபிஎம் மனு

சேலம், அக். 9- சேலம் மாநகராட்சி 16 ஆவது வார்டு பகுதியில் அடிப்படை வசதிகள் செய்து தர வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாநகராட்சி அலுவலகத் தில் புதனன்று மனு அளிக்கப்பட் டது. சேலம் மாநகராட்சி 16 ஆவது வார்டு பகுதியில் சுமார் 1500 குடி யிருப்புகள் உள்ளது.  இதில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொது மக்கள் வசித்து வருகின்றனர்.  குறிப்பாக பெரம்பலூர் பகுதி நாராயண பிள்ளை தெரு, பெருமாள் கோவில் தெரு, ஹவுசிங் போர்டு ஆகிய பகுதிகளில் பொது கழிவுநீர் தொட்டி நிரம்பி சாலை மற்றும் குடி யிருப்பு பகுதிகளில் தேங்கி கிடப் பதால் பல்வேறு தொற்று நோய்கள் ஏற்படும் அச்சத்தில் பொதுமக்கள் உள்ளனர்.   மேலும் 4 ரோடு முதல் விஜயா மருத்துவமனை வரை சாக்கடை கழிவுநீர் செல்ல வழியில்லாமல் தேங்கி நிற்கிறது. இதனால் மருத்துவமனைகள், வணிக நிறுவ னங்கள் அதிகளவில் உள்ள இப்பகு திக்கு  வரக்கூடிய பொதுமக்கள் மிக வும் பாதிக்கப்படுகின்றனர். இதேபோல் பெரம்பலூர் பகுதியில்  குடிநீர் தொட்டி மின் மோட்டார்  பழுதாகி உள்ளது. இதனை  சரி செய்ய வலியுறுத்தி புதனன்று மாநகராட்சி செயற்பொறியாளர் அசோகனிடம் 16ஆவது வார்டு  பொதுமக்கள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மனு அளிக்கப்பட்டது. இதில் சிபிஎம் மாநகர் வடக்கு செயலாளர் என்.பிரவீன்குமார், பெரம்பலூர் கிளை செயலாளர் எம். தணிகைவேல் மற்றும் டி. நந்தகுமார் உள்ளிட்ட திரளான பொதுமக்கள் பங்கேற்றனர். இம் மனுவை பெற்றுக் கொண்ட செயற் பொறியாளர் இதுகுறித்து உரிய  நடவடிக்கை எடுப்பதாக உறுதி யளித்தார்.