சேலம், ஜூலை 7- சேலம் அரசு மருத்துவமனையிலுள்ள கொரோனா வார் டில் பணியாற்றிய 4 தூய்மைப் பணியாளர்கள் உட்பட 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்தில் கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்படும் நபர்கள் அரசு மருத்துவமனையில் அமைக் கப்பட்டுள்ள சிறப்பு சிகிச்சை வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர். நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் வகை யில் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்கள் என தனி குழுக்கள் அமைக்கப்பட்டு ஏழு நாட்கள் தனிமைப்படுத்தப்படுகின்றனர். தொடர்ந்து ஏழு நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு அதன் பின்னர் பணிக்கு திரும்பும்போது அவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு பரிசோதனையின் முடிவில் நோய்த் தொற்று இல்லாத பட்சத்தில் மட்டுமே அவர்கள் பணிக்கு திரும்ப அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
அவ்வாறு கடந்த ஜூன் 26 ஆம் தேதியன்று கொரோனா வார்டில் பணியாற்றிய மூன்று தூய்மைப் பணியாளர்க ளுக்கு கொரோனா நோய்த்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதால், அவர்களுடன் பணியாற்றிய மருத் துவர்கள், செவிலியர்கள், தூய்மைப்பணியாளர்கள் என அனைவரும்உடனடியாக தனிமைப்படுத்தப்பட்டு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 4 தூய்மைப் பணியாளர்கள் மற்றும் 2 உதவி செவிலியர்கள் என 6 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர்கள் அனைவ ருக்கும் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.