tamilnadu

img

கொரோனா வார்டாக மாறும் மசூதி

இந்தியாவிலேயே மஹாராஷ்டிரா தான் அதிக கொரோனா பாதிப்புகளை கொண்டுள்ளது. இங்கு கொரோனாவுக்கு 400 பேர் பலியாகி உள்ள நிலையில் பாதித்தவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை நெருங்குகிறது. மாநிலத்தில் அதிகபட்சமாக மும்பையில் 6,169 பேருக்கும், புனேயில் 1,174 பேருக்கும் தொற்று உள்ளது.

இந்நிலையில் புனேயில் உள்ள மசூதி ஒன்றின் முதல் மாடி, கொரோனா நோயாளிகளை தனிமைப்படுத்தும் வார்டாக மாற்றப்பட்டுள்ளது. ஒன்பதா யிரம் சதுர அடி வசதி கொண்ட மசூதியின் முதல் மாடியான அஸாம் கேம்பஸ் இன்ஸ்டிடியூட், 80 படுக்கை வசதிகளு டன் தனிமை வார்டாக மாற்றப்பட்டுள் ளது. இது பவானி பெத், நானா பெத் நகரை ஒட்டியுள்ளது. 

இதுகுறித்து ஹாஜி குலாம் முஹமது அசாம் கல்வி அறக்கட்டளையின் தலை வர் டாக்டர் பி.ஏ.இனாம்தார் கூறுகை யில், மசூதியின் ஒரு பகுதியை கொரோனா தனிமை வார்டாக மாற்ற அனுமதி பெற் றுள்ளோம். இதன்படி முதல் தளம் தயா ராகி உள்ளது. தனிமைப்படுத்தப்படுப வர்களுக்கு உணவு வழங்கவும் ஏற் பாடு செய்யப்பட்டுள்ளது. கொரோனா வுக்கு எதிராகப் போராடும் மாநில அர சுக்கு உதவ, எங்களால் முடிந்த உதவி களை செய்கிறோம். பொறுப்புள்ள குடி மக்களாக அரசாங்கத்தோடு இணைந்து எங்கள் கடமைகளை நிறைவேற்ற உள் ளோம். தனிமைப்படுத்தப்படுபவர் களுக்கு தேவையான படுக்கை வசதி கள், மின்விசிறிகள் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் மசூதியிலேயே உள்ளன என்றார். 

புனே மாவட்ட ஆட்சியருக்கு எழு திய கடிதத்தில், “காவல்துறை மற்றும் அரசு அதிகாரிகள் மற்றும் நோயாளி களுக்கு காலை உணவு, உணவு வழங்க தயாராக இருப்பதாக” அவர் தெரிவித் துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில்.வளாகத்தில் உள்ள யுனானி மருத்துவக் கல்லூரியின் 25 மருத்துவர்கள் மற்றும் அவர்களது ஐந்து ஆம்புலன்ஸ்கள் புனேவின் மத்திய (பெத்) பகுதிகளில் நோயாளிகளுக்கு சேவை செய்துவரு கின்றன. அசாம் வளாகம் இதுவரை ரூ.25 லட்சத்துக்கு மேற்பட்ட மளிகைப் பொருட்களை ஏழைகளுக்கு விநியோ கித்துள்ளது. புனித ரமலான் மாதத்தில் (ரம்ஜான்) மசூதிகளுக்குச் செல்லாமல் வீட்டிலேயே பிரார்த்தனை (நமாஸ்) செய்ய வேண்டும் என்றும் டாக்டர் இனாம் தார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.