tamilnadu

சேலத்திலும் முறைகேடு அம்பலம் கிசான் திட்டத்தில் ரூ.6 கோடி மோசடி

சேலம்,செப்.11- மத்திய அரசின் கிசான் திட்டத்தில் சேலம் மாவட் டம் முழுவதும் பதிவு செய்த 18 ஆயிரம் பேரில் 10 ஆயி ரம் பேர் தகுதியற்றவர்கள் எனவும், அவர்கள் பெற்ற சுமார் 6 கோடி ரூபாயை திரும்ப பெற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித் துள்ளார். இதுதொடர்பாக சேலம் மாவட்ட ஆட்சியர் சி.அ.ராமன்  செய்தியாளர்களிடம் கூறுகையில், மத்திய அரசின் பிரதமர் கிசான் சம்மன் நிதி திட்டத் தில் சேலம் மாவட்டத்தில் மொத்தம் 18 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நிதியு தவிகள் வழங்கப்பட்டுள்ளன . இச்சூழலில் இத்திட் டத்தில் முறைகேடுகள் நடந்ததாக எழுந்த புகா ரின் அடிப்படையில் சேலம் மாவட்டத்தில் வங்கியா ளர்கள் , வருவாய்த் துறை , வேளாண்மைத் துறை , தோட்டக்கலைத் துறை உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலர்களை ஒருங்கிணைந்து 175 குழுக்கள் அமைக்கப்பட்டு மாவட்டம் முழுவதும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன .

இதில், இதுவரை 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நபர்கள் இந்நிதி பெறுவதற்கு தகுதியற்றவர்கள் என  கண்டறியப்பட்டு, அவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்ட ரூ.6 கோடி நிதியுதவி தொகையினை திரும்ப பெறுவதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்து  மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதுவரை மொத் தம் ரூ .1.80 கோடி நிதி திரும்ப பெறப்பட்டுள்ளன. வருகின்ற 14.09.2020 - க்குள் அனைத்து நிதியையும் திரும்ப பெற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன . மேலும், இம்முறைகேட்டில் ஈடு பட்டதாக தனியார் பொது சேவை மையங்களைச் சேர்ந்த 2 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 51 பேர் மீது சந்தேகம் உள்ளது. குறிப்பாக 10-க்கும் மேற்பட்ட நபர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு உரிய ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.  இவ்வாறு மாவட்ட ஆட்சியர்  தெரிவித்தார்.