tamilnadu

img

ஆசிரியர் கூட்டுறவு சங்கத்தில் ரூ.3.11 கோடி மோசடி நடவடிக்கை எடுக்க ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தல்

சேலம், செப்.1- கொளத்தூர் ஒன்றிய பணியாளர் ள் மற்றும் ஆசிரியர்கள் கூட்டுறவு சங் கத்தில் ரூ. 3.11 கோடி மோசடி நடந்துள் ளது எனவும், சம்மந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தி யுள்ளது. சேலம் மாவட்டம், மேட்டூர் வட்டம், கொளத்தூர் ஒன்றிய அலுவலகம் அருகே எஸ்.எம்.38, கொளத்தூர் ஒன் றிய பணியாளர்கள் மற்றும் ஆசிரியர் கள் கூட்டுறவு சிக்கன மற்றும் நாணய சங்கம் செயல்பட்டு வருகிறது. இதில், கொளத்தூர் ஒன்றியத்தில் தொடக்க,  நடுநிலைப் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் சத்துணவு ஊழி யர்கள் என 236  பேர் உறுப்பினர்களாக உள்ளனர். இந்நிலையில், 2006 ஆம்  ஆண்டு முதல் 2018 ஆம் ஆண்டு வரை  லாபத்தில் இயங்கிய இச்சங்கம் 2018-2019 ஆண்டு தணிக்கை அறிக்கையின் படி ரூ.3.11 கோடி  நஷ்டத்தில் இயங்குகிறது என்ற அறிக்கை ஆசிரியர்கள் மற்றும் சத்து ணவு ஊழியர்களின் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  இது குறித்து தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மா வட்ட பொருளா ளர் ரா.ரமேஷ்  வெளியிட்ட  அறிக்கையில் தெரிவித்துள்ள தாவது: ஒவ்வாரு வருடமும் சங்கம் ஈட்டிய லாபத்தை பங்கு ஈவுத் தொகையாக ஒவ்வொரு உறுப்பினர்களுக்கும் ஜனவரி மாதம் வழங்குவது வழக்கம். அதன்படி 2017-2018 தணிக்கை அறிக் கையின்படி சங்கம் ஈட்டிய லாபம் ரூ.34 லட்சம் ஆகும்.

ஆனால், இந்த  ஆண்டு அனைத்து உறுப்பினர் களுக்கும் பங்கு ஈவுத் தொகை வழங்க வில்லை. இது குறித்து  நிர்வாகக் குழு விடம் கேட்டபோது, 2018-2019 ஆண்டு தணிக்கையின்படி சங்கம்  ரூ.3.11 கோடி நஷ்டத்தில் இயங்கு கிறது என்று அறிக்கை வந்துள்ளது. இதுகுறித்து நிர்வாக குழுவிடம் கேட்கையில், நாங்கள் ஏப்.9 ஆம் தேதி யில் தான் பதவி ஏற்றோம். நாங்கள் பதவி ஏற்ற பிறகு ரூ.17 லட்சம் மட்டும் முறைகேடு நடந்துள்ளது. அதில் ரூ.5 லட்சத்தை வசூல் செய்து சங்கத் தின் வங்கி கணக்கில் செலுத்தி விட்டோம். மேலும், ரூ.12 லட்சத்தை வசூல் செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறோம். மீதி இருக்கும் ரூ.2.94  கோடி எங்களுக்கு முன்பு இருந்த நிர்வாகக்குழு மற்றும் தனி அலுவலர் காலத்தில் நடைபெற்று இருக்கலாம் என  தெரிவித்துள்ளனர்.  இந்த மோசடி செயலில் ஈடு பட்டு பொய்க் கணக்கு எழுதிய செய லாளர் மீதும், லாபமே ஈட்டாத சங் கத்தை லாபத்துடன் செயல்படுகிறது என போலியான தணிக்கை அறிக் கையை தயாரித்து வழங்கிய தணிக்கை யாளர்கள் மீதும் கூட்டுறவு துறை நிர் வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.