tamilnadu

img

மின்சார சட்டத் திருத்த மசோதா 2020ஐ ரத்து செய்திடுக இலவச மின்சார உரிமை பாதுகாப்பிற்கான கூட்டியக்கம் மாவட்ட ஆட்சியரிடம் மனு

சேலம், ஜூன் 5 - மத்திய அரசின் மின்சார சட்டத்  திருத்த மசோதா 2020 -ஐ ரத்து  செய்ய வலியுறுத்தி இலவச  மின்சார உரிமை பாதுகாப்பிற் கான கூட்டியக்கம் சார்பில் சேலம் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக் கப்பட்டது.

மத்திய அரசு இந்திய மின்சார திருத்த சட்ட மசோதா 2020 என்ற  பெயரில் புதிய சட்ட த்திருத் தத்தைக் கொண்டு வந்துள்ளது. அத்திருத்தத்தின் மீதான கருத்தை மாநிலங்கள் பதிவு செய்வதற்காக ஜூன் இரண்டாம் தேதி வரை  காலக்கெடு நிர்ணயித்து உள்ளது. அவற்றில் மிக முக்கியமானது இந்திய மின்சார சட்டம் பிரிவு 63 மற்றும் 65களில் முன்மொழிந் துள்ள திருத்தங்கள் நடை முறைக்கு வந்தால் விவசாயிகள்,  ஏழைகள், கைத்தறி மற்றும்  விசைத்தறித் தொழிலாளர் களுக்கும் வீட்டு மின்சார நுகர் வோருக்கும் தமிழகஅரசு மானியம் கொடுப்பதில் மாபெரும் சிக்கல் ஏற்படும் என்பதாகும்.

 எனவே மத்திய அரசு கொண்டு வந்துள்ள மின்சார சட்ட திருத்த மசோதா 2020 -ஐ ரத்து செய்து இலவச மின்சார உரிமையை காக்க வேண்டும். தட்கல் முறை யில் மின் இணைப்பினை பெறு வதற்கு தற்போது ஒரு குதிரை திறனுக்கு ரூபாய் 20 ஆயிரம் என்ற வீதத்தில் பெறப்படும் வைப்புத்தொகை முற்றிலுமாக ரத்து செய்து கட்டணமில்லாமல் பெறும் வகையில் வரைமுறைப் படுத்த வேண்டும். மின்சார இணைப்பு வேண்டி ஏற்கனவே பல ஆண்டுகளாக காத்திருக்கும் விவசாயிகளுக்கு உடனடியாக வேளாண் மின் இணைப்பு வழங்க  வேண்டும்  உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி இலவச மின் சார உரிமைப் பாதுகாப்பிற்கான கூட்டியக்கம் சார்பில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க சேலம் மாவட்டச் செயலாளர் எ. ராம மூர்த்தி தலைமையில் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத் கத்தில் மனு அளிக்கப்பட்டது. இந்நிகழ்வில், விவசாயிகள் கூட்டியக்கம் சார்பில் முத்துசாமி மற்றும் சுரேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.