tamilnadu

சமூக வலைதளங்களில் மூழ்கியதால் பெற்றோர் கண்டிப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை

 சேலம், மார்ச் 1- சமூக வலைத்தளங்களில் மூழ்கிய கல்லூரி மாணவியை பெற்றோர்கள் கண்டித்ததால் தூக்கிட்டு தற் கொலை செய்து கொண்டார்.  சேலம் மாவட்டம், காடையாம்பட்டி தீயணைப்பு நிலையம் அருகே அச்சகம் நடத்திவருபவர் கோவிந்தராஜ். இவருக்கு மகன், மகள் மற்றும் மனைவியுடன் வசித்து வரு கிறார். மகள் ரக்சா   (19)  தனியார் கலை மற்றும் அறிவி யியல் கல்லூரியில் ஆங்கிலம் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில் அவர் கடந்த ஒருவருடமாக தனக்கு  செல்போன் வாங்கி கொடுக்கும்படி தந்தையிடம் கேட்டுள்ளார். இதைதொடர்ந்து மகளுக்கு செல்போன் வாங்கி கொடுத்தார். இதனையடுத்து அவர் செல்போன் வந்ததில் இருந்து படிக்காமல் சமூக வலைத்தளங்களை பார்த்து கொண்டிருந்ததால், இதனை பெற்றோர்கள் கண்டித்துள்ளனர்.  இந்நிலையில், படுக்கை அறைக்கு தூங்க சென் றவர் விடியும்வரை அறையை விட்டு வரவில்லை. இதைத் தொடர்ந்து அவரது பெற்றோர்கள் கதவை உடைத்து  பார்த்தனர். அப்பொழுது மாணவி ரக்சா தூக்கிட்டு  இறந்த நிலையில் தொங்கியுள்ளார். அவரை பார்த்த பெற்றோர்கள் அதிர்ச்சியில் தீவட்டிபட்டி காவல்துறையினருக்குத் தகவல் கொடுத்தனர்.  தகவலை அறிந்த காவல்துறையினர் விரைந்து வந்து பிரேதத்தை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்பு மாணவியின் செல்போனை கைப்பற்றி தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.