tamilnadu

img

குடியரசு தினத்தன்று அரசு டாஸ்மாக் மதுபானக் கடை திறப்பு

சேலம், ஜன. 26- 71வது குடியரசு தினமான ஞாயி றன்று சேலத்தில் மதுபானக் கடை  திறக்கப்பட்டிருந்தது பொதுமக் கள் இடையே பெரும் அதிர்ச்சியை  ஏற்படுத்தியுள்ளது. இந்தியா முழுவதும் ஞாயிறன்று 71  ஆவது குடியரசு தின விழா கொண்டா டப்பட்டு வந்த நிலையில் மதுபான  கடைகளை மூட அரசு உத்தரவிட்டி ருந்ததையடுத்து தமிழகத்திலும் அரசு டாஸ்மாக் மதுபான கடைகளை மூடுவ தற்கு அரசு உத்தரவிட்டு இருந்தது.அதை தொடர்ந்து தமிழகத்தில்  மதுவி லக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அரசாணை எண் 50 இன் படி இந்திய  குடியரசு தினத்தை ஒட்டி மதுபானக்க டைகளை மூடப்பட வேண்டும் என  சேலம் மாவட்ட ஆட்சியர் ராமன் அறி வித்திருந்தார். அதைத் தொடர்ந்து சேலம் மாவட்டம் முழுவதும் அரசு மதுபானக் கடைகள் மூடப்பட்டிருந்த நிலையில் சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள அப்பம்மசமுத்திரம், முல்லைவாடி, அம்மம்பாளையம், கெங்கவல்லி, நடுவலூர், தம்மம்பட்டி, கடம்பூர், ராமநாயக்கன் பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சந்துக்கடை என்னும் பெயரில் கள்ளத்தனமாக மதுபானங்கள் விற்பனை  நடைபெற்று வருகிறது.  இந்த கடைகளில் இளம் வாலிபர்க ளும், வயதானவர்களும், மது பிரியர் கள் அதிக அளவு சென்று மதுபான ங்களை கள்ளத்தனமாக  அதிக விலை  கொடுத்து வாங்கிச் சென்றனர். இந்த  சந்துக் கடையில் இருந்து மதுபானங் களை வாங்கிச் செல்லும் வீடியோக்கள்  சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வந்தபோதும் இதன் மீது நடவ டிக்கை எடுக்க வேண்டிய காவல் துறையினர் கண்டுகொள்ளாமல் சட்ட விரோதமாக செயல்படும் சந்துக் கடை உரிமையாளர்களுக்கு ஆதர வாக செயல்படுவதாக சமூக ஆர்வலர் கள் குற்றம் சாட்டியுள்ளனர்.  இந்திய குடியரசு நாளை ஒட்டி மதுபான கடை களை மூட வேண்டும் என்று அரசு  ஆணை இட்டும் முதல்வர் மாவட்ட மான சேலம் மாவட்டத்தில் உள்ள ஆத்தூர் பகுதியில் பல்வேறு இடங்க ளில் குடியரசு தினத்தன்று  கள்ளத்த னமாக மதுபானங்கள் விற்பனை நடை பெற்று வருவது பொதுமக்கள்  இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.