tamilnadu

இளம்பிள்ளை அருகே எருது விடும் விழா மாடு முட்டியதில் ஒருவர் காயம்

இளம்பிள்ளை, மார்ச் 7- இளம்பிள்ளை அருகே எருது விடும் விழாவில் மாடு முட்டியதில் ஒருவர் காய மடைந்தார்.   சேலம் மாவட்டம், இளம்பிள்ளை அருகே உள்ள இ.காட்டூர் பகுதியில் அமைந்திருக்கும் செல்லாண்டி அம்மன் கோவில் திருவிழா நடைபெற்று வருகிறது.இதனையொட்டி வெள்ளியன்று மாலை யில் எருது விடும் விழா நடைபெற்றது. இவ் விழாவில் 20-க்கும் மேற்பட்ட காளைகள் கலந்து கொண்டது. இதில் இளைஞர்கள் ஆர்வத்துடன் விளையாடி வந்தனர். இங்கு வேடிக்கை பார்க்க வந்த இ. காட்டூர் பகுதியைச் சேர்ந்த செல்லமுத்து மகன் தங்கராஜ் (42) மாடு முட்டியதில் மார்பில் பலத்த காயம் ஏற்பட்டு சேலம் அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார் . இந்த எருதாட்ட விழாவிற்கு மகுடஞ்சாவடி காவல் நிலைய ஆய்வாளர் சசிகுமார் தலை மையில் 10 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.