இளம்பிள்ளை, மே 18- மாரமங்கலத்துபட்டி மற்றும் மகுடஞ்சாவடி பகுதிகளில் திமுக சார்பில் ஏழை, எளிய குடும்பங்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டது. கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஏற்படுத்தப் பட்ட ஊரடங்கு உத்தரவினால் பலர் வேலை இழந்து, அவரது குடும்பங்கள் பெரும் பாதிப்பிற்குள்ளாகி உள்ளது. இந்நிலையில் இளம்பிள்ளையை அடுத்த மாரமங்கலத்துப் பட்டி பகுதியில் பாதிக்கப்பட்ட ஏழை, எளிய குடும்பங் களுக்கு திமுகவின் ஒன்றிணைவோம் வா திட்டத்தின் கீழ் ஞாயிறன்று நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டது.
இதில் மாரமங்கலத்துபட்டி பகுதி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் விஜயா மணிமாறன், வீரபாண்டி ஒன்றிய செயலா ளர் வெண்ணிலா சேகர், சேலம் கிழக்கு மாவட்ட பொறுப் பாளர் சிவலிங்கம், சேலம் எம்.பி பார்த்திபன் ஆகியோர் பங் கேற்று நிவாரண பொருட்களை வழங்கினர். இதேபோல், மகுடஞ்சாவடி ஒன்றிய பகுதியில் அப் பகுதி திமுக சார்பில் 450 பேருக்கு நிவாரணப் பொருட் கள் வழங்கப்பட்டது. இதை மேற்கு மாவட்ட பொறுப் பாளர் டி.எம்.செல்வகணபதி வழங்கினார். மேலும், மேற்கு மாவட்ட பகுதியில் பணிபுரியும் 50 பத்திரிகையாளர்களுக்கு மாவட்ட இளைஞரணி சார்பில் சானிடைசர், கையுறை, முக கவசம் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்களை வழங் கினார். இந்நிகழ்ச்சியில் மகுடஞ்சாவடி ஒன்றிய பொறுப் பாளர் பச்சமுத்து, முன்னாள் எம். எல். ஏ காவேரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.