சென்னை, மே 23-திமுக வழக்கறிஞர் பிரிவு செயலாளர் கிரிராஜன் தமிழக தேர்தல் ஆணையர் சத்யபிரத சாகுவை சந்தித்து மனு அளித்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:21 சட்டப்பேரவை தொகுதிக்கான தபால் வாக்குகளை வாக்கு எண்ணிக்கை துவங்கும் போதே எண்ணியிருக்க வேண்டும். ஆனால் அப்படி எண்ணாமல் தற்போது நிறுத்தி வைத்திருக்கிறார்கள். அதிமுக குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடையும் நிலை ஏற்பட் டால், இந்த தபால் வாக்குகளை தங்களுக்கு சாதகமாக தவறாக பயன்படுத்துவார்கள் என்ற சூழ்நிலை உள்ளது.எனவே வாக்கு இயந்திரங்களில் உள்ள வாக்குகளை எண்ணி முடிப்பதற்குள் தபால் வாக்குகளை எண்ணி முடிக்க வேண்டும் என தேர்தல் ஆணையரை சந்தித்து மனு அளித்துள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.